5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். வீடு, வாங்குவது, விற்பது உங்கள் எண்ணப்படி அமையும்.

தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மகள் உங்களை தாமதமாகப் புரிந்துக் கொள்வாள். மகனின் கூடாப்பழக்கம் விலகும். விலகியிருந்த சகோதரங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். தாய்வழி சொத்துகள் வந்து சேரும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

தாய்வழியில் அனுகூலம் உண்டு. வழக்கில் நிதானம் அவசியம். உறவினர்கள், நண்பர்களிடம் அளவாகப் பழகுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். தூக்கமின்மை, ஒற்றை தலை வலி வந்து விலகும். ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

கலைத்துறையினர்களே! உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க வேண்டிய மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 5, 15, 17, 26
அதிஷ்ட எண்கள்: 1, 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, ஆலிவ்பச்சை
அதிஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன்

Comments

comments

Related posts