மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்

மனித நேயத்தின் மறுஉருவமாய் விளங்கும் நீங்கள், மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

உடன்பிறந்தவர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிட்டும். பழைய சொந்த-பந்தங்களை சந்திப்பீர்கள். நீண்ட காலப் பிரார்த்தனையை இப்போது நிறைவேற்றுவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் வாகன வசதிப் பெருகும்.

பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களின் தியாக உள்ளத்தைப் புரிந்துக் கொள்வார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். அத்தை, அம்மான், தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

17ந் தேதி வரை சூரியன் 4-ல் அமர்ந்திருப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ராகு 2-ம் இடத்திலும், கேது 8-லும் தொடர்வதால் பார்வைக் கோளாறு, வீண் விரையங்கள், ஏமாற்றங்கள், பேச்சால் பிரச்னைகள், சிறுசிறு விபத்துகளெல்லாம் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். முகப்பரு, பசியின்மை நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் அதிகரிக்கும். விளம்பர யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

Comments

comments

Related posts