கொழும்பில் மாணவியை நிர்வாணமாக படம் பிடித்த மாணவர்கள்

கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் மாணவி ஒருவரை பிறந்தமேனியுடன் படம் எடுத்துள்ளமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

குறித்த மாணவியும் மாணவன் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் தினமும் சந்தித்து பேசியுமுள்ளனர். ஒருநாள் கல்கிஸையில் உள்ள விடுதி ஒன்றுக்கு தனது சக மாணவர்களுடன் காதலியை அழைத்துச் சென்ற மாணவன் படம் எடுத்துள்ளார்.

ஏனைய மாணவர்களுடன் கூட்டுச் சேர்ந்து விடுதிக்குச் சென்றவேளை மாணவி மறுத்துள்ளார். ஆனால் மாணவியை அச்சுறுத்திய காதலனான மாணவன் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததுடன் படமும் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி விடுதியில் பணிபுரியும் ஊழியரிடம் முறையிட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் மாணவி பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் பாடசாலை அதிபருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸ் விசாரணை இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. விடுதி உரிமையாளரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மாணவியின் பெற்றோரும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் ஒருவர் கூறினார்.

குறித்த மாணவியும் மாணவர்களும் கொழும்பு மாவட்டத்தில் கல்வி கற்றாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் என்றும் அந்த ஆசிரியர் மேலும் தெரிவித்தார்.

Comments

comments

Related posts