கடக ராசியில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்

கால நேரம் பார்க்காமல் எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும், கருத்துமாக இருப்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப்பட்ட காரியங்கள் முடியும். கண் கோளாறு, பல் வலியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் கௌரவம் உண்டு. சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.

வழக்குகள் எதிர்பார்த்ததை விட நல்ல விதத்தில் முடியும். மற்றவர்களை நம்பி ஏமாந்துப் போன விஷயங்கள் இந்த மாதத்தில் முடியும். ஆனால் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எதுவாக இருந்தாலும் நீங்களே நேரில் சென்று எல்லா வேலைகளை செய்து முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில நேரங்களில் கோபப்படுவீர்கள். சிலரின் சுயரூபத்தை அறிந்துக் கொண்டு வருத்தப்படுவீர்கள். சிலர் ஏன் இப்படி எல்லாம் நன்றிக் கெட்ட தனமாக நடந்துக் கொள்கிறார்கள் என்று வேதனைப்படுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய இனிமையான அனுபவங்கள் நினைவுக்கு வரும். உறவினர், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியுடன் பேசுவீர்கள். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். மனைவிவழியில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அடகிலிருந்த நகையை மீட்க புது வழி யோசிப்பீர்கள். குரு 4-ல் அமர்ந்திருப்பதால் தாயாருக்கு முதுகுத் தண்டில் வலி, அசதி, சோர்வு வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீட்டை விரிவுப்படுத்துவது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் வீரியத்தை குறைத்துக் கொண்டு காரியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். சந்தை நிலவரங்களை அவ்வப்போது தெரிந்துக் கொள்ளுங்கள். அசல் விலைக்கே பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.

Comments

comments

Related posts