இலங்கை பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் அவசர அறிவித்தல்

புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுடைய படங்களை ‘ பெனர்’ மூலம் காட்சிபடுத்தவேண்டாம் என கல்வி அமைச்சு ஐந்தாம் தர வகுப்புகளை கொண்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

5ம் ஆண்டு புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் புகைப்படங்களை பாடசாலைகளில் ‘பெனர் ‘ மூலமாக காட்சிப்படுத்தவேண்டாம் என கல்வி அமைச்சு அவசர சுற்றறிக்கையினை நேற்று (06.10.2017) வெளியிட்டுள்ளது.

இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளின் புகைப்படங்களை பெனர்கள் மூலம் காட்சிப்படுத்துவதனால் சித்திபெறத் தவறிய பிள்ளைகளின் மன நிலை பாதிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Comments

comments

Related posts