இலங்கை பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் அவசர அறிவித்தல்

புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுடைய படங்களை ‘ பெனர்’ மூலம் காட்சிபடுத்தவேண்டாம் என கல்வி அமைச்சு ஐந்தாம் தர வகுப்புகளை கொண்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 5ம் ஆண்டு புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் புகைப்படங்களை பாடசாலைகளில் ‘பெனர் ‘ மூலமாக காட்சிப்படுத்தவேண்டாம் என கல்வி அமைச்சு அவசர சுற்றறிக்கையினை நேற்று (06.10.2017) வெளியிட்டுள்ளது. இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளின் புகைப்படங்களை பெனர்கள் மூலம் காட்சிப்படுத்துவதனால் சித்திபெறத் தவறிய பிள்ளைகளின் மன நிலை பாதிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

நாவற்குழியுடன் நிறுத்தப்படவுள்ள யாழ்ப்பாண ரயில் சேவை

கொழும்பு – காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு – காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக இந்த சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் புகையிரதத்திற்கு முற்பதிவு செய்த பயணிகள் விசேட பேரூந்து மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

கொழும்பில் மாணவியை நிர்வாணமாக படம் பிடித்த மாணவர்கள்

கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் மாணவி ஒருவரை பிறந்தமேனியுடன் படம் எடுத்துள்ளமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. குறித்த மாணவியும் மாணவன் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் தினமும் சந்தித்து பேசியுமுள்ளனர். ஒருநாள் கல்கிஸையில் உள்ள விடுதி ஒன்றுக்கு தனது சக மாணவர்களுடன் காதலியை அழைத்துச் சென்ற மாணவன் படம் எடுத்துள்ளார். ஏனைய மாணவர்களுடன் கூட்டுச் சேர்ந்து விடுதிக்குச் சென்றவேளை மாணவி மறுத்துள்ளார். ஆனால் மாணவியை அச்சுறுத்திய காதலனான மாணவன் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததுடன் படமும் எடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி விடுதியில் பணிபுரியும் ஊழியரிடம் முறையிட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மாணவி பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் பாடசாலை அதிபருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸ்…

Read More

கடக ராசியில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்

கால நேரம் பார்க்காமல் எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும், கருத்துமாக இருப்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப்பட்ட காரியங்கள் முடியும். கண் கோளாறு, பல் வலியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் கௌரவம் உண்டு. சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வழக்குகள் எதிர்பார்த்ததை விட நல்ல விதத்தில் முடியும். மற்றவர்களை நம்பி ஏமாந்துப் போன விஷயங்கள் இந்த மாதத்தில் முடியும். ஆனால் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எதுவாக இருந்தாலும் நீங்களே நேரில் சென்று எல்லா வேலைகளை செய்து முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில நேரங்களில் கோபப்படுவீர்கள். சிலரின் சுயரூபத்தை அறிந்துக் கொண்டு வருத்தப்படுவீர்கள். சிலர் ஏன் இப்படி எல்லாம் நன்றிக் கெட்ட தனமாக நடந்துக் கொள்கிறார்கள் என்று…

Read More

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். வீடு, வாங்குவது, விற்பது உங்கள் எண்ணப்படி அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மகள் உங்களை தாமதமாகப் புரிந்துக் கொள்வாள். மகனின் கூடாப்பழக்கம் விலகும். விலகியிருந்த சகோதரங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். தாய்வழி சொத்துகள் வந்து சேரும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தாய்வழியில் அனுகூலம் உண்டு. வழக்கில் நிதானம் அவசியம். உறவினர்கள், நண்பர்களிடம் அளவாகப் பழகுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். தூக்கமின்மை, ஒற்றை தலை வலி வந்து விலகும். ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சக…

Read More

உங்கள் பிள்ளையின் ஜாதகம் உங்களை பாதிக்குமா?

ஒருவருக்கு திருமணம் ஆகாதவரை அவரவர் ஜாதகத்திற்கே பலன் அதிகம். ஆனால் திருமணம் ஆகி குடும்பம் என்று ஆனா பிறகு அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்திற்கே பலன் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுவும் குழுந்தை பிறப்பதற்கு முன்பு வரை தான். ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தையின் ஜாதகத்திற்கே பலன் அதிகம். உதாரணத்திற்கு தந்தையின் ஜாதகத்தை பொறுத்தவரை அவருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பிள்ளையின் ஜாதகப்படி சொந்த வீட்டில் தான் வாழவேண்டும் என்று இருந்தால், அவர்கள் வீடு வாங்கி விடுவார்கள். சில நேரங்களில் தந்தையும் பிள்ளைகளும், வேலை காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ பிறந்து வாழ்வார்கள். இதற்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது பிள்ளைகளின் ஜாதகம் தான். பிள்ளையின் ஜாததம் ஒருவரை கோடீஸ்வரனாகவும், கடன்காரனாகவும் மற்றும் வல்லமை…

Read More

உடலுறவில் ஈடுபாடே இல்லாம இருக்கா? காரணம் மற்றும் தீர்வுகள் இதோ

உடலுறவு என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அனைவருக்கும் உடலுறவு சம்பந்தப்பட்டவற்றை படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். படித்தவற்றை முயன்று பார்ப்பதும், பல இடங்களுக்கு சென்று, புதுப்புது இடங்களில் புதுவித சுகத்தை அனுபவிப்பது அனைவருமே விரும்பும் ஒன்று தான். ஆனால் பலருக்கு நாட்கள் செல்ல செல்ல உடலுறவு மீதான நாட்டம் ஏனோ குறைந்து கொண்டே வருகிறது..! அது எதனால் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆண்கள் மற்றும் பெண்களிடம் உடலுறவு சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் 4,839 ஆண்கள் மற்றும் 6,669 பெண்களும் கலந்து கொண்டனர். இவர்களது வயது வரம்பானது 18 முதல் 74 வயது வரை ஆகும். இவர்கள் ஒரு வருடமாக உடலுறவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவானது மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது. அது என்னவென்றால்,…

Read More

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்

மனித நேயத்தின் மறுஉருவமாய் விளங்கும் நீங்கள், மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிட்டும். பழைய சொந்த-பந்தங்களை சந்திப்பீர்கள். நீண்ட காலப் பிரார்த்தனையை இப்போது நிறைவேற்றுவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் வாகன வசதிப் பெருகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்….

Read More

கொழும்பில் கொள்ளையில் ஈடுபடும் இளம் பூலாந்தேவிகள்

பொலிஸ் அதிகாரிகள் என கூறி வைத்தியரை கடத்திய 5 பேர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திய சந்தேக நபர்கள் வைத்தியரை கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியரின் தங்க மோதிரம் மற்றும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை பலவந்தமாக பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளனர். சந்தேக நபர்கள் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் இரு பெண்களும் அடங்குதவாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்களில் பெண்கள் அதிகம் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் புதுக்கடை இலக்கம் ஒன்று நீதவான் நீதமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read More

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஏற்பட்ட திடீர் குழப்பம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தபோதிலும் சில விசமிகள் தவறான கருத்தை சமூகத்தில் பரப்பி வருவதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி தெ. கங்காதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்களின் பங்கேற்புடன் மாணவர்கள் இணைந்து மிகச்சிறப்பான முறையில் நேற்றைய தினம் ஆசிரியர் தினத்தினை கொண்டாடியிருந்தனர். மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை குழப்பாத வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. நினைவுப்பரிசில்களும் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டதுடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையில் மதிய உணவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு விழா கோலாகலமாக இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் பாடசாலைக்கும் அங்கு கற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் முகமாக சிலர் விசமத்தனமான கருத்தை சமூகத்தில்…

Read More