3000 ரூபா அறையில் சிக்கிய 17 வயது நீர்கொழும்பு பாடசாலை மாணவிகள்

பாடசாலை சீருடை அணிந்த நிலையில், மாணவிகள் இருவர் இரு இளைஞர்களுடன் விடுதியில் தங்கியிருந்த போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது நிரம்பிய மாணவிகள் இருவரும், 21 வயதுடைய இளைஞர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 ஆயிரம் ரூபாவிற்கு அறைகளை வாடகைக்கு விடும் குறித்த நபர், வத்தளை பகுதியை சேர்ந்தவர் எனவும், சட்டவிரோதமாகவே விடுதியை நடத்தி வந்துள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் பாடசாலை சீருடையுடன் விடுதியில் தங்குவதற்கு அனுமதித்தமை பாரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நீர்கொழும்பு காவல்துறை மற்றும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Comments

comments

Related posts