பெற்றோல் விடயத்தில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கூறியுள்ள அமைச்சர்

எரிபொருட்களின் விலை உயர்த்தப்படக் கூடாது என பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பெற்றோலிய வளம் போன்ற மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டியதில்லை.

இது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். எனவே எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படக் கூடாது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வடையும் போது விலைகளை உயர்த்தவும், குறையும் போது குறைக்கவும் கூடிய வகையிலான விலைப்பொறிமுறை விரைவில் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

எரிபொருளின் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டாலும், மக்கள் மீதான சுமையை கருத்திற் கொண்டு விலை உயர்த்தப்படாது.

எனினும், அரசாங்கம் விலைகளை உயர்த்த வேண்டுமென தீர்மானித்தால் விலைகளை உயர்த்த நேரிடும்.

இந்திய எரிபொருள் நிறுவனம் விலைகளை உயர்த்தக்கூடும், அவர்களுக்கு தேவையான வகையில் விலைகளில் மாற்றம் செய்தால் அது பிழையானது என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts