இலங்கையில் ஆணுறை தொடர்பாக புதிய உத்தரவு

பால்வினை நோய்களைத் தடுக்கும் பொருட்களை வழக்கின் தடயப் பொருட்களாக நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பால்வினை நோய்களைத் தடுக்கும் ஆணுறை உள்ளிட்ட பொருட்களை வழக்கு தடயப் பொருட்களாக நீதிமன்றில் சமர்ப்பிக்கக் கூடாது என சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைப் பிரிவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழக்கு தடயப் பொருட்களாக அவர்களிடமிருந்து மீட்கப்படும் ஆணுறை உள்ளிட்ட பால்வினை நோய்கள் தொற்றுவதனை தடுக்கும் பொருட்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கின்றனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நிரூபிக்கும் நோக்கில் இந்த பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சினால் இந்த பொருட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதனால் இவற்றை வைத்திருப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளதாக ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments

Related posts