வீட்டுக்கு பத்திரம் வேண்டுமென கோரி வித்தியாவின் தாய் கடிதம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வீட்டுக்கு இதுவரை காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என வித்தியாவின் தாயார் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வித்தியாவின் குடும்பத்தாருக்கு வவுனியாவில் புதிய வீடு கட்டித்தருவதாக உறுதியளித்திருந்தார்.

அதன்படி வவுனியாவில் சுமார் 2 பரப்புக் காணியில் வித்தியாவின் குடும்பத்தாருக்கு வீடு ஒன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

எனினும் குறித்த வீடு அமைக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்­கள் கடந்தும் காணிக்குரிய உறுதியோ வேறு ஆவணங்களோ இதுவரை கிடைக்கவில்லை என சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் காணி அமைச்சுக்கு பல கடிதங்கள் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு தரப்பட்ட வீட்டுக்கு இதுவரை உறுதிப் பத்திரங்கள் கிடைக்காமை தொடர்பில் 2 வாரங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலமாக முறையிட்டுள்ளதாகவும், அவரின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts