ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்

எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பாத நீங்கள், உழைப்பை நம்பி வாழ்வீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வழக்கு சாதகமாக முடியும். குடும்ப வருமானம் உயரும். பழைய பெரிய பிரச்னைகள் தீரும். ஆனால் சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். உங்கள் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குழந்தை பாக்யம் கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். 13-ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் பூமி சம்பந்தப்பட்ட சிக்கல்கள், சொத்துப் பிரச்னைகள், பாகப் பிரிவினைகள் சாதகமாக முடியும்.

மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். 17ந் தேதி வரை 5-ம் வீட்டில் நிற்கும் சூரியனும், 14-ந் தேதி முதல் செவ்வாயும் 5ல் அமர்வதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். அரசாங்க விஷயங்கள் தள்ளிப் போய் முடியும். உங்கள் ராசிநாதன் சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் வாகனப் பழுது நீங்கும். பாதியிலேயே நின்று போன வீடு கட்டும் பணி முழுமையடையும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குரு 6-ம் இடத்தில் மறைந்திருப்பதால் இருப்பதால் அவ்வப்போது தூக்கம் குறையும். மற்றவர்கள் உங்களைப் பற்றி குறைவாகவும், தாழ்வாகவும் நினைப்பதாக எண்ணுவீர்கள். அந்த தாழ்வுமனப்பான்மை வேண்டாம். முன்கோபத்தையும் தவிர்க்கப் பாருங்கள். நெருங்கமாகப் பழகியவர்களின் நட்பை இழக்க நேரிடும். கன்னிப் பெண்களே! யார் எது பேசினாலும் நம்பிவிடாதீர்கள்.

உண்மையானவர்களை இனங்கண்டறியப் பாருங்கள். பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். சந்தை நுணுக்கங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். வேலையாட்களிடம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். உத்யோகத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். சக ஊழியர்களில் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம். ஆழமறிந்து காலை விட வேண்டிய மாதமிது.

Comments

comments

Related posts