கள்ளத் தொடர்பில் கர்ப்பமான இலங்கை பல்கலைக் கழக மாணவிக்கு பாடம் சொன்ன நாய்

பல்கலைக்கழக மாணவியினால் அநாதரவாக விட்டுச் சென்ற குழந்தையை நாயொன்று பாதுகாத்த சம்பவம் பதிவாகி உள்ளது.

12 நாட்களான குழந்தையை வீதியில் விட்டு சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில், ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

இரவு நேரத்தில் மருந்து கடைக்கு அருகில் குழந்தையை விட்டு சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபரான பல்கலைக்கழக மாணவி பொலன்னறுவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையின் போது அவர் குழந்தையின் தாயார் என்பது உறுதியாகியுள்ளது.

அனுராதபுரம் வைத்தியசாலையில் அந்த குழந்தை தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றது.

குழந்தை சுற்றப்பட்ட துணியில் நாய் ஒன்றின் பாத தடங்கள் காணப்பட்டுள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் நாய் பாதுகாத்தமை தொடர்பில் ஆச்சரியமடைந்ததாக அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

தாய் குழந்தையை வீதியில் விட்டு சென்ற சந்தர்ப்பத்திலும் நாயின் பாதுகாப்பு கிடைத்துள்ளதாகவும், குறித்த தாய்க்கு நாய் தகுந்த பாடம் ஒன்றை கற்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையை பிரசவிக்கவிருந்த பல்கலைக்கழக மாணவி புலியன்குலம் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்துள்ளார். குழந்தை பிரசவித்த பின்னர் அவர் மீண்டும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த மாணவி குறித்த பிரதேசத்தில் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பொன்றை ஏற்படுத்தியிருந்த நிலையில் பின்னர் அவர் கர்ப்பமடைந்துள்ளார். எனினும் இதுதொடர்பில் குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல் மறைத்துள்ளார்.

குழந்தை பிரசவித்த விடயம் பெற்றோர் அறிந்து கொண்டால் தன்னை கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் இவ்வாறு குழந்தையை விட்டு சென்றதாக மாணவி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அவர் அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குழந்தையை பார்ப்பதற்கு அவர் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தனது கணவர் ஜப்பானில் வேலை செய்வதாக கூறி குறித்த மாணவி வீட்டொன்றை வாடகைக்கு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments

comments

Related posts