கள்ளத் தொடர்பில் கர்ப்பமான இலங்கை பல்கலைக் கழக மாணவிக்கு பாடம் சொன்ன நாய்

பல்கலைக்கழக மாணவியினால் அநாதரவாக விட்டுச் சென்ற குழந்தையை நாயொன்று பாதுகாத்த சம்பவம் பதிவாகி உள்ளது. 12 நாட்களான குழந்தையை வீதியில் விட்டு சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவி விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில், ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார். இரவு நேரத்தில் மருந்து கடைக்கு அருகில் குழந்தையை விட்டு சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபரான பல்கலைக்கழக மாணவி பொலன்னறுவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையின் போது அவர் குழந்தையின் தாயார் என்பது உறுதியாகியுள்ளது. அனுராதபுரம் வைத்தியசாலையில் அந்த குழந்தை தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றது. குழந்தை சுற்றப்பட்ட துணியில் நாய் ஒன்றின் பாத தடங்கள் காணப்பட்டுள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் நாய் பாதுகாத்தமை…

Read More

டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சி கண்ட இலங்கை ரூபா

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதியாளர்களுக்கான டொலரின் தேவை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் மூலம் அமெரிக்க நாணயத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 153.39 ரூபாவாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ரூபாவின் பெறுமதியை நிலையாக வைத்திருப்பதில் இலங்கை மத்திய வங்கி கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த கூலி தொழிலாளியின் மகன்

மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட முறாவோடை தமிழ் சக்தி வித்தியாலய மாணவன் கல்குடா வலயத்திலேயே முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இவர் கல்குடா வலயத்தில் 182 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். முறாவோடை தமிழ் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் பிரதீபன் நிதுர்ஜன் எனும் மாணவனே இவ்வாறு சித்தியடைந்தார். இது தொடர்பில் மாணவனின் தந்தையான பிரதீபன் கருத்து தெரிவிக்கையில், “நான் மிகவும் கஷ்டப்பட்டு, கூலிக்கு பால் இழுத்து, எனது மகனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்து படிக்க வைத்தேன். மேலும் எனது மகனுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும், அதிபர் சா.சுதாகரன் அவர்களுக்கும் இறைவனுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

Read More

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். அவ்வப்போது ஒருவித பயம், படபடப்பு வந்துச் செல்லும். முன்கோபத்தை குறையுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். யோகா, தியானம் செய்வது நல்லது. சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த ஒப்பந்தங்கள்…

Read More

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். மனைவிவழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டாகும். கறாராகப் பேசி வர வேண்டிய பணத்தை வசூலிப்பீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீர புது வழி பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். அவ்வப்போது வேலைச்சுமை, தூக்கமின்மை, சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்களால் கட்டுக்கடங்காத செலவுகள் வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். சக ஊழியர்களின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். கலைத்துறையினர்களே! தடைப்பட்ட வாய்ப்புகள் மீண்டும் வரும். சவால்களில் வெற்றி…

Read More

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்

எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பாத நீங்கள், உழைப்பை நம்பி வாழ்வீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வழக்கு சாதகமாக முடியும். குடும்ப வருமானம் உயரும். பழைய பெரிய பிரச்னைகள் தீரும். ஆனால் சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். உங்கள் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குழந்தை பாக்யம் கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். 13-ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் பூமி சம்பந்தப்பட்ட சிக்கல்கள், சொத்துப் பிரச்னைகள், பாகப் பிரிவினைகள் சாதகமாக முடியும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். 17ந் தேதி வரை 5-ம் வீட்டில் நிற்கும் சூரியனும், 14-ந் தேதி முதல்…

Read More

இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய டாட்டூ

நயன்தாரா தற்போதெல்லாம் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகின்றார். மேலும், இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவரின் பிறந்தநாளுக்கு கூட அமெரிக்காவில் இருவரும் கொண்டாடினர், இந்நிலையில் நயன்தாரா கையில் தற்போது புதிய டாட்டூ ஒன்று உள்ளது. இதற்கு முன் அதில் தன் முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயர் இருந்தது, தற்போது அதை அப்படியே Positivity என்று மாற்றிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது. காதல் தோல்வியை கூட Positivity -யாக மாற்றிய நயன்தாரா என ரசிகர்கள் புகழ்ந்தும் வருகின்றனர்.

Read More

12 நாள் சிசுவை வீதியில் விட்டுச்சென்ற பல்கலை மாணவி நீதிமன்றத்தில் கூறிய காரணம்!

சிசுவை வீதியில் விட்டுச்சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவரை அநுராதபுரம் நீதிமன்ற நீதவானும் மாவட்ட மேலதிக நீதவானுமான ஹர்ஷன கெக்குனுவெல பிணையில் விடுதலை செய்துள்ளார். ஒரு இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் குறித்த மாணவி இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்துக்கொண்ட குறித்த மாணவி 12 நாட்கள் கடந்த நிலையில், குழந்தையை துணியினால் சுற்றி வைத்தியசாலைக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளார். விட்டு சென்ற குழந்தையை மீட்ட காவல்துறையினர் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், குழந்தையை பிரசவித்த பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியினை இனங்கண்டதோடு பொலன்னறுவையில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவிக்கு எதிராக காவல்துறையினர் வழக்கினையும் தாக்கல் செய்துள்ளனர்….

Read More

இது உங்கள் வீட்டில் இருக்கிறதா! – எச்சரிக்கை

FIDGET SPINNER என்று குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் மன அழுத்தத்தை குறைக்கும் என்று இதனை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நகரங்களில் ஸ்பின்னருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அதிக அளவில் இதனை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.இதை உபயோகிப்பவரின் ஞாபக சக்தியை மெல்லக்கொல்லும் என்றும் மேலும் அறிவுத்திறமையை மழுங்கடிக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் இதை வைத்து விளையாடும் போது அதனுள் வீரல் மாட்டிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதோடு குழந்தைகள் பல வகையில் இதனால் ஆபத்து ஏற்படவாய்ப்புள்ளது. எனவே FIDGET SPINNER உபயேகிப்பதை தவிர்ப்பது நல்லது.

Read More

வீட்டுக்கு பத்திரம் வேண்டுமென கோரி வித்தியாவின் தாய் கடிதம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வீட்டுக்கு இதுவரை காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என வித்தியாவின் தாயார் சரஸ்வதி தெரிவித்துள்ளார். வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வித்தியாவின் குடும்பத்தாருக்கு வவுனியாவில் புதிய வீடு கட்டித்தருவதாக உறுதியளித்திருந்தார். அதன்படி வவுனியாவில் சுமார் 2 பரப்புக் காணியில் வித்தியாவின் குடும்பத்தாருக்கு வீடு ஒன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டது. எனினும் குறித்த வீடு அமைக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்­கள் கடந்தும் காணிக்குரிய உறுதியோ வேறு ஆவணங்களோ இதுவரை கிடைக்கவில்லை என சரஸ்வதி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பில் காணி அமைச்சுக்கு பல கடிதங்கள் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார். எமக்கு தரப்பட்ட வீட்டுக்கு இதுவரை உறுதிப் பத்திரங்கள் கிடைக்காமை தொடர்பில் 2 வாரங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலமாக முறையிட்டுள்ளதாகவும், அவரின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும்…

Read More