இலங்கை அரச ஊழியர்களுக்கு இன்னுமோர் மகிழ்ச்சியான செய்தி

அரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வரை நீடிப்பது பற்றி கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். தனியார் துறை ஊழியர்களின் வயதெல்லை 60 வரை நீடிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்பிக்கப்படவுள்ளது. மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள 90 சதவீதமான பிள்ளைகள் தமது பெற்றோரை கௌரவமான முறையில் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள். நாட்டில் 308 முதியோர் இல்லங்கள் காணப்படுவதாகவும் இங்கு எண்ணாயிரம் பேர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

கொக்குவிலை அதிரவைத்த நேற்றைய வாள்வெட்டு சம்பவம் – பொலீஸாரின் அதிரடி

யாழ். கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டுக் குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் ஊழியருக்கும் பிரிதொரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகறாரே இந்த சம்பவத்திற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு இரவு வேளையில் சென்ற வாள்வெட்டுக் குழுவினர், அங்கிருந்த பொருட்களை அடித்து பாரிய சேதம் வளைவித்து விட்டு தப்பிச் சென்றிருந்தனர். மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

நீதிபதி இளஞ்செழியனை மீதான துப்பாக்கிச் சூடு! சந்தேகநபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், இருதரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை. கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூர் பகுதியில் துப்பாக்கிப் சூடு நடத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், மற்றும் ஒரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்திருந்தார். இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சற்றுமுன் கொள்ளுபிட்டியில் பரபரப்பு – தீயில் கருகுகிறது பிரபல கிறிஸ்கட் கட்டடம்

கொழும்பு கொள்ளுபிட்டி க்ரஸ்கெட் கட்டிடத்தொகுதியில் தீபரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் முதலாவது மாடியில் இவ்வாறு தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு பிரிவின் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாம் இணைப்பு – புகைப்படங்கள்

Read More

துபாய் போல பணக்கார நாடாக மாறப்போகும் இலங்கை

மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை எரிவாயு வைப்புகளை 2021 ஆண்டில் எரிபொருளாக தாயரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றோலிய ஆய்வு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் போது பெற்ரோலியம் வள மேம்பாட்டு செயலகம் இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய, 2018 ஆம் ஆண்டில், இயற்கை எரிவாயு வைப்புகளுக்கு உற்பத்தி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படும். மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை வாயு வைப்புகளில் சுமார் 2 மில்லியன் கலன்கள் இயற்கை எரிவாயு மற்றும் 10 மில்லியன் திரவ எரிவாயு பீப்பாய்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. மன்னார் கடற்படுகையின் 4442 அடி ஆழத்தில் எரிவாயு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் எரிவாயு மட்டுமல்லாமல் கனிய எண்ணெய் வளமும் உள்ளமை ஆய்வின் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இறக்குமதி மூலம் இலங்கையின் எரிபொருள் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக பல பில்லியன் டொலர்கள் வருடாந்தம் செலவிடப்படுகிறது. மன்னார் கடற்படுகையில் எரிபொருள்…

Read More

இலங்கை அரசின் சாதுர்யம் – தேங்காய்க்கு சிகப்பு மை

தெங்கு அபிவிருத்தி சபை 65 ரூபாய்க்கு மானிய விலையில் பொதுமக்களுக்கு தேங்காய்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குறித்த தேங்காய்கள் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஒருவருக்கு 10 தேங்காய் வீதம் கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் 75 ரூபா முதல் 100 ரூபா வரையில் அதிக விலைக்கு தேங்காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், 65 ரூபா என்ற குறைந்த விலையில் தேங்காயை கொள்வனவு செய்து, அதை அதிக விலைக்கு மீண்டும் விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கில் குறித்த தேற்காய்களுக்கு சிவப்பு நிற வர்ணம் பூசிவ விற்பனை செய்ய தெங்கு அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

மது அருந்தி சிறுவர் தினத்தை கொண்டாடிய இலங்கை மாணவர்கள்

களுத்துறையில் சர்வதேச சிறுவர் தினத்தன்று சில மாணவர்கள் மது அருந்தி கொண்டாடிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த மாவட்டத்தின் பாடசாலை ஒன்றில் சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று சிறுவர் தின கொண்டாட்டங்களும், சித்திரக் கண்காட்சியொன்றும் நடைபெற்றது. இந்தப் பாடசாலையில் தரம் 12 இல் கல்வி கற்கும் 6 மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் மதுபான விருந்துபசாரமொன்றை நடத்தியுள்ளனர். பாடசாலை மைதானத்தில் வெற்று மதுபான போத்தல், சோடா போத்தல் என்பனவற்றை மீட்டுள்ளதுடன், இது தொடர்பில் பாடசாலை அதிபர் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் அழைத்து கடுமையாக எச்சரித்து, மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த பாடசாலை மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். மதுபானம் அருந்திய மாணவர்களை களுத்துறை வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற போதும் பொலிஸாருக்கு அறிவிக்காது மாணவர்களை…

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (25-03 ஒக்டோபர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

தின பலன் – 3 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் ராசி ரிஷபம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு ராசி மிதுனம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட…

Read More