தின பலன் – 29 செப்டம்பர் 2017

தின பலன்

ராசி மேஷம்
உங்களின் பலம் பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ராசி ரிஷபம்
இன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன பிரச்னைகளைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். கணவன-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி மிதுனம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் தொடர்புக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ராசி கடகம்
வாழ்க்கையில் வெற்றி பெற கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போக வேண்டும் என்ற உண்மையை உணர்வீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ராசி சிம்மம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் குறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி கன்னி
முக்கிய பிரமுகர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் நிம்மதி உண்டாகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி துலாம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்யோத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி விருச்சிகம்
இங்கிதமாகவும், இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ராசி தனுசு
இன்றும் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். தண்ணீர் அதிகமாக அருந்துங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகள் வேண்டாமே. உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ராசி மகரம்
குடும்பத்தினருடன் பிணக்குகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

ராசி கும்பம்
கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களால் மற்றவர்களால் ஆதாயமடைவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

ராசி மீனம்
பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களால் பலனடைவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை வட்டியுடன் திரும்பித் தருவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

Comments

comments

Related posts