தனது மனைவியின் கள்ளத்தொடர்பை வெளியிட்ட நடிகர் தாடி பாலாஜி

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜி மீது அவரது மனைவி நிறைய புகார்கள் கொடுத்திருக்கிறார்.

அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், தாடி பாலாஜி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தனது மனைவி நித்யாவுக்கு, பைசல் என்பவருடன் தொடர்பு இருப்பதை அறிந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறினார்.

தமிழ்நாடு காவல்துறை மாநில குற்றஆவண காப்பகத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார், பைசலுடன் சேர்ந்து கொண்டு, தமது மனைவி விவகாரத்தில் தலையிடக் கூடாது எனக் கூறி தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாலாஜி புகார் கூறியுள்ளார்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுக்கும் குரல் பதிவை பொலிசாரிடம் கொடுத்துள்ளதாகவும் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts