கணவனை சந்தோசப்படுத்த கள்ளக் காதலனை போட்டுத் தள்ளிய பத்தினி

கள்ளக்காதலனை உயிரோடு எரித்து கொலை செய்த வழக்கில் ஒரு பெண் மற்றும் அவரின் கணவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதல் வைத்திருக்கும் பெண்கள், கள்ளக்காதலனோடு சேர்ந்து, தனது கணவரை கொலை செய்த செய்திகளை இதற்கு முன்பு நாம் நிறைய படித்துள்ளோம். ஆனால், அதற்கு நேர்மாறான சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

புது டெல்லி ஷாதரா நகரில் உள்ள காந்திநகர் பகுதியில் பூசாரியாக இருப்பவர் லக்கான் (30). அவரின் மனைவி, சந்திரசேகர் (35) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த விவகாரம் லக்கானுக்கு தெரிய வர, அவர் மனைவியை எச்சரித்துள்ளார். அப்போது எழுந்த வாக்குவாதத்தில், நான் சந்திரசேகரை மறந்துவிடுகிறேன். மேலும், அவரை கொலை செய்யவும் நான் உங்களுக்கு உதவியாக இருக்கிறேன் என லக்கானின் மனைவி கூறியுள்ளார்.

இதனையடுத்து, லக்கானின் மனைவி, கடந்த 24ம் தேதி சந்திரசேகரை கோவிலுக்கு வரவழைத்துள்ளார். அப்போது, தம்பதி இருவரும் சேர்ந்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது தலையை சுவற்றில் முட்டி கொலை செய்துள்ளனர். மேலும், அவரை எரித்து, அந்த உடலை, கோவிலில் உள்ள ஒரு அறையில் போட்டு விட்டனர்.

போலீசாரின் விசாரணையில், லக்கான் மற்றும் அவரது மனைவி இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். மேலும், உடல் அழுகிய நிலையில், சந்திரசேகரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts