வித்தியா வழக்கில் அதிரடித் தீர்ப்பு – 7 பேரை சாகும்வரை தூக்கிலிட உத்தரவு

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது. இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 30 வருட ஆயுள் தண்டனையும், 30, 000 ரூபா தண்டப்பணமும், உயிரிழந்த மாணவியான வித்தியாவின் குடும்பத்திற்கு ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டை வழங்குமாறும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. நீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு 7 பேருக்கும் தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மேலும், அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை இன்று அறிவித்துள்ளனர். மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன்…

Read More

வித்தியாவை நான்கு பேர் ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்தது உறுதியானது

புங்குடுதீவு மாணவி வித்தியா 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகள் நால்வரினால் கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டார் என்பதை தீர்ப்பாயம் உறுதி செய்தது அரச தரப்புச் சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியம், கண்டகண்ட சாட்சியான நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியத்தின் அடிப்படையிலும், சட்ட வைத்திய அதிகாரி மயூரதனின் சாட்சியத்தின் அடிப்படையிலும் தீர்ப்பாயம் இதனை உறுதி செய்தது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தற்போது 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசிக்கின்றார். இதன்படி, 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகள் தான் இந்த வன்புணர்வை மேற்கொண்டனர் என்று தீர்ப்பாயம் முடிவுக்கு வந்துள்ளது.

Read More

வித்தியாவின் பலாத்கார வீடியோ எடுக்கப்பட்டது உண்மை! சாட்சியம் ஏற்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் பாடசாலை மாணவன் வழங்கிய சாட்சியத்தையும் குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரிக்கு வழக்கின் சந்தேகநபர் லஞ்சம் கொடுக்க முற்பட்டமை தொடர்பாக சாட்சியமளித்த இப்லானின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார். இந்த வழக்கில் இரண்டாம் எதிரியை வீதியில் கண்டதாக சிறுவன் வழங்கிய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரிக்கு வழக்கின் சந்தேகநபர் லஞ்சம் கொடுக்க முற்பட்டமை தொடர்பாக சாட்சியமளித்த இப்லானின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது. அவர் குற்றம் நடத்த இடத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்ற ரீதியும், குற்றத்துடன் தொடர்பற்றவர் என்ற ரீதியிலும் தீர்ப்பாயம் சாட்சியத்தை ஏற்றுக்…

Read More

இலங்கை ஜனாதிபதி மைத்திரிக்கு நோபல் பரிசு

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசிற்காக தெரிவு செய்யப்படப்படக் கூடியவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த பரிசிற்காக தகுதி பெற்றவர்களின் பட்டியலொன்றை ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது. குறித்த நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த பரிசை வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

இளஞ்செழியனை நம்புகின்றோம் – சிங்கள மக்கள் ஆதங்கம்

யாழ் குடாநாட்டை உலுக்கிய மாணவி வித்தியா படுகொலையின் தீர்ப்பு இன்னும் சில மணி நேரங்களில் வழங்கப்படவுள்ளது. இந்த கொலை மீதான வழங்கின் தீர்ப்பு இலங்கைக்கு அப்பால் சர்வதேசம் வரையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் தென்னிலங்கை மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு சாதாரணை தண்டனை கிடைத்துவிட கூடாதென தென்னிலங்கை மக்கள் தமது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். உண்மையாகவே சட்டம் செயற்படுகின்றது என்றால் குற்றவாளிகளின் கழுத்தை துண்டாக வெட்டிப்போட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் வீடுகளில் குற்றவாளிகள் வாழ்வதனையும் விட சொகுசான வாழ்க்கையை சிறைச்சாலையில் வாழ முடியும், மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது செயற்படுத்தப்படாது, இவ்வாறான அப்பாவி இளம் பெண்ணை கொலை செய்தவர்கள் மரணிக்கும் வரை தூக்கிலிட வேண்டும் என சிங்கள மக்கள் தமது…

Read More

கண்ணீருடன் நீதிமன்றில் ஆஜரானார் வித்தியாவின் தாய்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய், சற்றுமுன்னர் யாழ். மேல்நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். தனது மகளின் கொலைக்கான நீதி மாத்திரமன்றி, உலகின் எந்த தாயும் இவ்வாறான ஒரு துன்பியல் சம்பவத்தை எதிர்நோக்காத வகையில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென அந்தத் தாய் கோரியிருந்தார். அந்த வகையில் தனது மகளின் படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்படுமென்ற எதிர்பார்ப்பில், வித்தியாவின் தாய் கண்ணீருடன் மன்றிற்கு வந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவுக்கான நீதியை, முழு சர்வதேசமும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை அரச சேவையில் 2016.08.25 க்கு பின்னர் இணைந்தோருக்கு புதிய சுற்றறிக்கை

இலங்கை அரச சேவையின் இணைந்த சேவைகளில் 2016.08.25 ஆம் திகதிக்கு பின்னர் நியமனம் பெற்றோரின் நியமன கடிதங்களில் ஓய்வூதியம் தொடர்பான பகுதியில் மாற்றம் ஒன்றை செய்து புதிய சுற்றுநிருபம் ஒன்று 26.09.2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இணைந்த சேவைகள் விரிவினால் வெளியிடப்பட்ட 04/2017 ஆம் இலக்க் சுற்றறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016.08.25 ஆம் திகதிக்கு பின்னர் நியமனம் பெற்ற இலங்கை மொழிபெயர்ப்புச் சேவை, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்பசேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை, அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை, அலுவலக உதவியாளர் சேவை மற்றும் சாரதி சேவை களை சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவான உத்தியோகத்தர்களுக்கு இவ் அறிவித்தல் பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சி.வி.விக்னேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதி

வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. வடமாகாண முதலமைச்சரின் உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதற்கு நேற்றைய தினம் குறித்த சத்திரசிகிச்சை நடைபெற்று அவர் தற்போது இருதய சிகிச்சை விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் விடுமுறை கோரியபோதும், யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள காரணத்தினால் இதுவரை பதில் முதலமைச்சராக எவரையும் நியமனம் செய்யவில்லை என தெரியவருகின்றது.

Read More

மைத்திரியின் மகளை அவமானப்படுத்திய நாமல்

அண்மையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயசரிதை புத்தகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை நாமல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவினால், சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் அண்மையில் பண்டநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால், கொள்வனவு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்தன. நாமலினால் குறித்த புத்தகம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகி இருந்தன. இவ்வாறான நிலையில் ”ஜனாதிபதி தந்தை” புத்தகத்தை கொள்வனவு செய்தமைக்கான காரணத்தை நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார். “கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச…

Read More

மாணவி வித்தியா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு! ட்ரயல் அட்பார் என்றால் என்ன?

நீதித்துறை மற்றும் நீதிமன்றம் ஒரு நாட்டிற்கு மிக முக்கியத்துவம் பெற்ற மீயுயர் கருவியாகும். இந்த வகையில் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணைகள் எவ்வாறான முறையில் நடைபெறுகின்றது என்பது பற்றி அனைவரும் அறிந்திருப்பது அரிதானதாக காணப்படுகின்றது. இந்நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாய விசாரணை “ட்ரயல் அட்பார்” முறையாக அமைகின்றது. மேல் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கில் சில சந்தர்ப்பங்களில் விளக்கங்கள் நீதிபதியால் மட்டும் நடைபெறுவதையும் இன்னும் சில சந்தர்ப்பங்களில் நீதிபதியும் ஜுரிகளும் சேர்ந்து விளங்குவதையும் அவதானித்திருக்கின்றோம். ஆனால் இன்னும் சில சந்தர்ப்பங்களில் நீதாயத்தின் மூலம் (Trial –at Bar) மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளால் விளக்கப்படுவதையும் அவதானித்திருக்கலாம். இவற்றில் முன்னைய இரண்டு வித விளக்கங்களைப் பற்றிய அறிவு மக்களிடத்தில் பரந்து காணப்படுகிறது. ஆனால் நீதாயம் (Trial at Bar) மூலம் நடைபெறும் விளக்கத்தைப் பற்றிய பூரண அறிவு…

Read More