வார பலன் – (25 – 2 அக்டோபர் 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

மூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்களே! குரு உங்களது ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பெரிய மனிதர்கள் அறிமுகமாவார்கள். பணம் வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். புது வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். சோவா, லேப்-டாப், நவீன ரக கைப்பேசி சிலர் வாங்குவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கடன் பிரச்சனைகள் தீரும். ராசிநாதன் செவ்வாய் 5-ல் நிற்பதால் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 30, 1 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் அதிஷ்ட திசை: கிழக்கு

தன் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர்களே! ராகு பகவான் வலுவாக நிற்பதால் இழுபறியாக இருந்த பல வேலைகள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது. சகோதரரிக்கு திருமணம் கைக்கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். கண்டகச் சனியும், சகட குருவும் இருப்பதால் முக்கிய காரியங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள். உங்களின் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் சொல்லி ஆதாயம் தேட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளும், இடையூறுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 1 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், மஞ்சள் அதிஷ்ட திசை: தென்மேற்கு

பொது நலத்திற்காக பாடுபடுபவர்களே! செவ்வாயும், குருவும் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு வரும். பழைய நகையை மாற்றி புதிய டிசைனில் வாங்குவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்ட தொடங்குவீர்கள். ராசிநாதன் புதன் உச்சமடைந்திருப்பதால் உறவினர், நண்பர்கள் உங்களை புகழ்ந்துப் பேசுவார்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் குடும்பத்தில் சலசலப்பு, வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள், வீண் விரையங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலையாட்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். செல்வம், செல்வாக்குக் கூடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28, 29 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, பிஸ்தா பச்சை அதிஷ்ட திசை: வடகிழக்கு

மிதமாக யோசித்து வேகமாக செயல்படுபவர்களே! சூரியன் சாதகமாக இருப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சனி, குரு மற்றும் ராகு, கேது உங்களுக்கு சாதகமாக இல்லாததால் திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். போராட்டங்களை கடந்து முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 30 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பழுப்பு அதிஷ்ட திசை: வடமேற்கு

அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்களின் செயலில் வேகம் கூடும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உறவினர், நண்பர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் வரும். நெஞ்சு வலி, படபடப்பு, முன்கோபம், சிறுசிறு நெருப்புக் காயங்களெல்லாம் வரக்கூடும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். மருந்து, ரசாயன வகைகள் லாபம் தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 30, 1 அதிஷ்ட எண்கள்: 1, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ப்ரவுன் அதிஷ்ட திசை: மேற்கு

நகைச்சுவையாகவும், நாசூக்காவும் பேசுபவர்களே! ராஜ கிரகங்களான குருவும், சனியும் சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வேற்றுமதம், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். மகளுக்கு தள்ளிப் போய்க் கொண்டிருந்த கல்யாணம் நடந்தேறும். புது வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய இமேஜ் அதிகரிக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். செவ்வாய் 12-ல் நிற்பதால் சகோதர வகையில் அலைச்சல், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துச் செல்லும். சூரியன் ராசிக்குள் நிற்பதால் டென்ஷன் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து புது கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 28, 29 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, கிரே அதிஷ்ட திசை: தெற்கு

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நல்ல வேலை அமையும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், வீண் அலைச்சல்கள், தூக்கமின்மை வந்துச் செல்லும். ஜென்ம குரு தொடர்வதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். யாரும் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையேயென ஆதங்கப்படுவீர்கள். கெட்டவர்களின் சகவாசங்களிலிருந்து விடுபடப்பாருங்கள். வழக்குகளை நிதானமாக கையாளுங்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். எதிர்ப்புகளை தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28, 29 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மயில்நீலம் அதிஷ்ட திசை: வடக்கு

நாடிவருவோருக்கு நல்லதைச் செய்பவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் நீண்ட நாளாகத் தள்ளிப் போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் மனம்விட்டு பேசி முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சகோதரங்களால் பலனடைவீர்கள். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். குரு 12-லும், ஜென்மச் சனியும் தொடர்வதால் முன்கோபம், தூக்கமின்மை, ஒருவித பதட்டம், மனக்குழப்பம் வந்துச் செல்லும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சம்பளப் பாக்கி கைக்கு வரும். தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார். புத்துணர்ச்சி ததும்பும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 1 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்மேற்கு

யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாதவர்களே! குரு வலுவாக இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குழந்தை பாக்யம் உருவாகும். ஆன்மீக பெரியவரின் ஆசிக் கிட்டும். தடைப்பட்ட வீடு கட்டும் வேலை விரைவடையும். அரசால் ஆதாயம் உண்டு. புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் காரியத் தடைகள், ஏமாற்றம், எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். சிலர் உங்கள் வாயை கிளறி வேடிக்கை பார்ப்பார்கள். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தொட்டது துலங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 30, 1 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஊதா அதிஷ்ட திசை: தென்கிழக்கு

சோர்ந்து வருபவர்களை உற்சாகப்படுத்துபவர்களே! உங்களது ராசிநாதனான சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் எத்தனை போராட்டங்கள் வந்தாலும் சளைக்காமல் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புது வேலை அமையும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பணப்பற்றாக்குறை நீடிக்கும். ராசிக்கு 8-ல் செவ்வாய் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் வரும். சகோதரங்கள் கோபப்படுவார்கள். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். மின்சாரத்தை நிதானமாக கையாளப்பாருங்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். நெஞ்சு எரிச்சல், இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் வந்துச் செல்லும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பை வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 27, 1 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், மஞ்சள் அதிஷ்ட திசை: மேற்கு

கஞ்சத் தனம் இல்லாமல் வாரி வழங்குபவர்களே! சுக்ரன் சாதகமாக இருப்பதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணம் சேரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். என்றாலும் செவ்வாய் 7-ல் நிற்பதால் சின்ன சின்ன விவாதங்களும் வரக்கூடும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பள்ளிப் பருவத் தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். ராகு சாதகமாக இருப்பதால் வேற்றுமாநிலத்தவர் அறிமுகமாவார். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். லோன் கிட்டும். 8-ல் சூரியன் மறைந்திருப்பதால் கண் எரிச்சல், அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். திடீர் அதிர்ஷ்ட யோகம் உண்டாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 27, 28 அதிஷ்ட எண்கள்: 2, 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: கிழக்கு

நல்லது, கெட்டதை சமமாக பாவிப்பவர்களே! ராசிக்கு 6-ல் செவ்வாய் நிற்பதால் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வேற்றுமொழிக்காரார்களால் நற்செய்தியுண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மகனுக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். 6-ல் சுக்ரன் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போங்கள். மின்சாரம், மின்னணு சாதனங்கள் பழுதாகும். 7-ல் சூரியன் இருப்பதால் காரியத் தடை, ஏமாற்றம், உடல் உஷ்ணம் வந்து நீங்கும். புதன் 7-ம் வீட்டில் நுழைந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர், நண்பர்களுடனான மோதல்கள் விலகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். தன் பலம், பலவீனத்தை உணர வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 1 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, வெளிர்நீலம் அதிஷ்ட திசை: வடக்கு

Comments

comments

Related posts