தமிழரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள சிங்கப்பூர் சம்பவம்

சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியன் பைட்டிங் சாம்பியன் ஷிப் (Fighting Championship) குத்துச்சண்டை போட்டி கடந்த சனிக்கிழமை சிங்கபூரில் நடைபெற்றுள்ளது.

இப்போட்டியில் பிரபலமான வீரரான ஸ்டீவன் லிம் என்பவர் பங்கேற்க இவரை எதிர்த்து தமிழரான பிரதீப் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளார்.

போட்டி தொடங்கியதும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். அப்போது, பலத்த தாக்குதலுக்கு உள்ளான பிரதீப் மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார்.

இதன்போது, பிரதீப்பை அருகில் உள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறும் போது,

‘விளையாட்டு தொடங்குவதற்கு முன்னதாக இருவரிடமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், விளையாட்டு போட்டியில் பங்கேற்க இருந்த வீரர் விலகி கொண்டதால் குறுகிய காலத்தில் அந்த இடத்தில் பிரதீப் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த பிரதீப்பிற்கு அவரை எதிர்த்து சண்டையிட்ட ஸ்டீவன் லிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரதீப்பின் விரிவான பிரேத பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

comments

Related posts