பொறியியல் இளம் மாணவி எடுத்த மோசமான முடிவு

விடுதி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள பி.எஸ்.என்.ஏ தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவி தாரணி. இவர் நேற்று இரவு அவரின் பெற்றோர்களுக்கு தொலைபேசியில் பேசும் போது, நிர்வாகத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதுள்ளார். எனவே, அவரை காலையில் வந்து சந்திக்கிறோம் என பெற்றோர்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை அவர் கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வண்டி மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே மரணமடைந்து விட்டார் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், எங்கள்…

Read More

முஸ்லீம் பர்தாவுக்குள் இலங்கை இளைஞன் கைது

கண்கள் மட்டும் தெரியும் வகையிலான முகத்தினை மூடிய பர்தா உடையணிந்து பஸ்ஸில் ஏறிய இளைஞனொருவனை பதுளைப் பொலிசார் இன்று முற்பகல் கைது செய்துள்ளனர். தெமோதரையைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய எஸ்.ஏ. ஜயவர்த்தன என்ற இளைஞனே பர்தா உடையணிந்திருந்த நிலையில் பதுளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டவராவார். இவ் இளைஞன் இஸ்லாமியப் பெண்போன்று, பதுளை பஸ் நிலையத்திலிருந்து பசறை செல்லும் இ.போ.ச. பஸ்ஸில் ஏறிய போது, இவர் குறித்து சந்தேகம் கொண்ட பயணிகள் சிலர் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, பொலிசார் குறித்த நபரைக் கைது செய்தனர். மோசடியொன்றில் ஈடுபடும் பொருட்டே, இவ் இளைஞன் பஸ்ஸில் பயணிக்க முற்பட்டிருக்கலாமென்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். பதுளைப் பொலிசார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனுக்காக தூக்குக்காவடி எடுத்த இளைஞன் யார்?

தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று பல இடங்களிலும், பல நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நல்லூரில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது, கைதடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்துக்கு யாழ். இளைஞன் ஒருவர் பறவை காவடி எடுத்து வந்துள்ளார். காவடி எடுத்தல் என்பது கடவுள்களுக்காக மனிதனால் கொடுக்கப்படும் பக்தியின் வெளிப்பாடு, ஒரு நேர்த்திக்கடனாகும். அந்த வகையில் தியாக தீபம் திலீபனுக்காக ஒரு இளைஞன் பறவை காவடி எடுத்து வரும் காட்சியைப் பார்த்தபோது மக்கள் கண்களிலே கண்ணீரை வரவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் பௌத்த பிக்குகளால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட தயாரான ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள்

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் வசித்த வீடொன்று பௌத்த பிக்குகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் 36 பேர் தங்க வைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸை வீட்டை இன்று காலை திடீரென்று சிங்கலே ஜாதிக பலமுளுவ (Sinhale Jathika Balamuluwa ) சுற்றி வளைத்திருந்தனர். இதன்போது பெளத்த பிக்குகள் மற்றும் டான் பிரசாத் போன்றோர் அகதிகள் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கில் கடும் அச்சுறுத்தலாக செயற்பட்டதை அடுத்து அப்பிரதேசத்தில் பெரும் அச்ச நிலையொன்று ஏற்பட்டது. ரோஹிங்யர்கள் அகதிகள் அல்லவென்றும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் சிங்கலே ஜாதிக பலமுளுவ உறுப்பினர்கள் கோஷமிட்டுள்ளனர். இதனையடுத்து அவ்விடத்துக்கு விரைந்து வந்த கல்கிஸ்ஸை ​பொலிஸார் ரோஹிங்யா அகதிகளை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 2017 ஏப்ரல் மாதம் இலங்கை வந்தடைந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் 36 பேரை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான…

Read More

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் தனுஷ் பட பாணியில் கோர வாள்வெட்டு

யாழ். தென்மராட்சி கெருடாவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் துரைராஜா ரஜீவ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூலி வேலை செய்து விட்டு வீடு திரும்பிய நபர் மீது இரண்டு மோட்டார சைக்கிளில் நான்கு பேர் துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் வெட்டியுள்ளனர். இதன் போது கை, கால். மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Read More

வார பலன் – (25 – 2 அக்டோபர் 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

மூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்களே! குரு உங்களது ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பெரிய மனிதர்கள் அறிமுகமாவார்கள். பணம் வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். புது வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். சோவா, லேப்-டாப், நவீன ரக கைப்பேசி சிலர் வாங்குவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கடன் பிரச்சனைகள் தீரும். ராசிநாதன் செவ்வாய் 5-ல் நிற்பதால் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 30,…

Read More

சிங்களப் பெண்ணின் சேலை சாதனைக்கு ஆப்பு வைத்த கின்னஸ் நிறுவனம்

உள்ளூர் சட்டங்கள் மீறப்பட்ட எந்தவொரு சாதனையை தாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என கின்னஸ் உலக சாதனை பதிவுகளின் மூத்த PR முகாமையாளர் Doug Male உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விடயங்களை நாங்கள் முக்கியமாக கருத்திற்கொள்வோம் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி கண்டி நகரில் ருவன் புஷ்பகுமார மற்றும் சஜினி பிரியங்கிகா சுரவீரவின் திருமணத்தின் போது உலக சாதனை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட ஒசரி சேலையை அணியும் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் உலகளாவிய ரீதியில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளனர். புதிய உலக சாதனையை ஏற்படுத்தும் முயற்சிக்கு 250 பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமண நாளன்று அதிகாலையிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை கட்டாயப்படுத்தி, கன்னொறுவ – கண்டி சாலையில்…

Read More

பருத்தித்துறையில் சிறுவனை சிதைத்த தாயும், இரண்டாம் கணவனும்

யாழ்ப்பாணத்தில் சிறுவன் மீது கொடூர தாக்குதல் நடத்திய சிறிய தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறிய தந்தை மற்றும் அதனை வேடிக்கை பார்த்த தாயையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறிய தந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான். தவறொன்றை செய்ததாக கூறி சிறுவனை தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபர் கடுமையாக தாக்கியுள்ளர். இதன்போது சிறுவனின் தாயாரும் அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிறுவனின் தாயாரும் சிறிய தந்தையும் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

தமிழரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள சிங்கப்பூர் சம்பவம்

சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசியன் பைட்டிங் சாம்பியன் ஷிப் (Fighting Championship) குத்துச்சண்டை போட்டி கடந்த சனிக்கிழமை சிங்கபூரில் நடைபெற்றுள்ளது. இப்போட்டியில் பிரபலமான வீரரான ஸ்டீவன் லிம் என்பவர் பங்கேற்க இவரை எதிர்த்து தமிழரான பிரதீப் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளார். போட்டி தொடங்கியதும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். அப்போது, பலத்த தாக்குதலுக்கு உள்ளான பிரதீப் மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார். இதன்போது, பிரதீப்பை அருகில் உள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறும் போது, ‘விளையாட்டு தொடங்குவதற்கு முன்னதாக இருவரிடமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், விளையாட்டு போட்டியில் பங்கேற்க இருந்த வீரர் விலகி கொண்டதால் குறுகிய காலத்தில் அந்த இடத்தில் பிரதீப் விளையாட…

Read More

தின பலன் – 26 செப்டம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே ராசி ரிஷபம் உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் ராசி மிதுனம் எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில்…

Read More