பிரபல இலங்கை நடிகர் தூக்கிட்டு தற்கொலை

பிரபல இலங்கை நடிகர் தசுன் நிஷான் டி சில்வா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ள தசுன், பல இசை காணொளிகளிலும் நடித்துள்ளார்.

பிரபல கலைஞரான தசுன் தனிப்பட்ட காரணத்திற்காக இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

பல பாத்திரங்களில் நடித்துள்ள இவர் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற கலைஞராவார்.

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நடித்து வந்த தசுன் தான் தங்கியிருந்த அறையில் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

உயிரிழக்கும் போது அவரது உறவினர்கள் எவரும் அருகில் இருக்கவில்லை. தசுன் தான் காதலித்த பெண்ணுடன் பதிவு திருமணமும் செய்திருந்தார்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Comments

comments

Related posts