வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்காக 100% வரியை விதிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பான ஆலோசனை நிதியமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக உள்நாட்டு வெங்காய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கிலே குறித்த தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இன்று இரவு முதல் இலங்கை மக்களின் தலையில் இன்னுமோர் சுமை

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 110 ரூபாவால் அதிகரிக்க எரிவாயு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி , 12.5 கிலோ கிராம் நிறை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

Read More

இலங்கையில் ஓர் மன்மதன் – 40 பாலியல் துஷ்பிரயோகம் உட்பட 60 பெண்களிடம் லீலை

நாட்டின் பல பகுதிகளிலும் 65 பெண்கள் உட்பட பலரை ஏமாற்றி 10 கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த நபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். குறித்த நபருக்கு முன்னதாகவே பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நலையில், கம்பஹா யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த முக்கிய நபர்களுடன் நெருக்கமாக பழகி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மிகவும் தந்திரமான முறையில் பல வருடங்களாக இந்த நபர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். காலி – ஹினிதும, நெவசிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த கார்தி ஹேவகே அருணகுமார என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது தெரியவந்துள்ள சம்பவங்களின் அடிப்படையில் சந்தேகநபர் 65 பெண்களை பல வழிகளில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளார். இந்த பெண்களில் திருமணமானவர் மற்றும் திருமணமாகாத பெண்களும்…

Read More

இலங்கையில் ஆபாச நடனத்தில் ஈடுபடுத்தப்பட்ட பாடசாலை மாணவி

15 வயதான சிறுமியொருவர் இரவு நேர களியாட்ட விடுதியில் நடனத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு நேர களியாட்ட விடுதியில் ஏனைய பெண்களுடன் இந்த சிறுமி நடனத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் வசித்து வரும் குறித்த சிறுமி இன்னும் பாடசாலையில் பயின்று வருவதாக தெரியவருகிறது. இதேவேளை, சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நன்கு பழக்கமான 18 வயதான இளைஞன், சிறுமியை திருமண வைபவம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும் அன்றில் இருந்து சிறுமி வீடு திரும்பவில்லை என பெற்றோர் தும்மலசூரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமி வெலிக்கடை…

Read More

தியாகச் சுடர் திலீபனுக்கு கற்பூரம் கொழுத்தி வழிபட்ட இளைஞன் – சிங்கள சகோதரர்கள் நெகிழ்ச்சி

தியாகத் தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தற்போது உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு இந்த நிலையில் யாழ். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தை சூழவுள்ள பகுதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நினைவிடத்தில் திலீபனின் உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது. நினைவிடம் அமைந்துள்ள பகுதிக்கு இன்று காலை வருகை தந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் நினைவிடத்திற்கு முன்பாகக் கற்பூரம் கொளுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபடுவது போல தனது இருகரங்களையும் கூப்பி, இரு கண்களையும் மூடி ஆத்மார்த்தமாக வணக்கம் செலுத்தினார். குறித்த இளைஞரின் செயற்பாட்டைக் கண்டு அங்கு நின்ற சில சிங்கள மக்கள் நெகிழ்ச்சியடைந்ததுடன், குறித்த காட்சியைத் தமது கைத்தொலைபேசிகளில் புகைப்படங்களாக பதிவு செய்தனர். குறித்த இளைஞர் இவ்வருடம் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் ஆரம்பிக்கப்பட்ட நாள்…

Read More

பிரபல இலங்கை நடிகர் தூக்கிட்டு தற்கொலை

பிரபல இலங்கை நடிகர் தசுன் நிஷான் டி சில்வா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ள தசுன், பல இசை காணொளிகளிலும் நடித்துள்ளார். பிரபல கலைஞரான தசுன் தனிப்பட்ட காரணத்திற்காக இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. பல பாத்திரங்களில் நடித்துள்ள இவர் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற கலைஞராவார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நடித்து வந்த தசுன் தான் தங்கியிருந்த அறையில் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். உயிரிழக்கும் போது அவரது உறவினர்கள் எவரும் அருகில் இருக்கவில்லை. தசுன் தான் காதலித்த பெண்ணுடன் பதிவு திருமணமும் செய்திருந்தார். மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Read More

சிங்களப் பெண்ணால் மானபங்கப்படுத்தப்பட்ட வை.கோபாலசாமி

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தமிழின உணர்வாளரும், ம.தி.மு.கவின் தலைவருமான வைகோ என அழைக்கப்படும் வை.கோபாலசாமியுடன் சிங்களப் பெண் ஒருவர் கடுமையாக தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் 36ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல நாடுகளில் இருந்தும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகைத்தந்துள்ளனர். இதன்போது, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி இந்தியாவிலிருந்து ஜெனிவா சென்றுள்ள வைகோவுடன், இலங்கையிலிருந்து ஜெனிவா சென்றுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் வீரசேகர குழுவில் அங்கம் வகிக்கும் பெண் ஒருவர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வைகோ கருத்து தெரிவிக்கையில், “நீ தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி உள்ளது? நீ யார்?” என கேள்வி கேட்டார். இதன்போது குறித்த சிங்கள பெண்ணுக்கும் வைகோவுக்கும்…

Read More

இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் ஓய்வூதியம் பெறும் அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இரண்டு சோடி வருடாந்த புகையிரத ஆணைச் சீட்டுக்களே வழங்கப்பட்டு வந்தன. இனிமேல் மூன்று சோடி ஆணைச்சீட்டுக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான சுற்றுநிரூபம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (18 -24 செப்டெம்பர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

இலங்கையில் ஒரே நேரத்தில் 304 மாணவ காதல் ஜோடிகள் கைது

அனுராதபுரம் மாநகர சபையினால் பாரமரிக்கப்படும் ரிவர் பார்க் மற்றும் நேச்சர் பார்க் பூங்காக்களில் விசேட தேடுதலை நடத்திய பொலிஸார், 304 இளம் காதல் ஜோடிகளை பிடித்து அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள், அனைவரும் பகுதி நேர வகுப்பு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, அனுராதபுரம் நகருக்கு வந்த பாடசாலை மாணவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். இரண்டு பேருந்துகளில் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட காதல் ஜோடியினர் எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 45 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பூங்காக்கள் ஜயஸ்ரீ மஹாபோதி புனித வெள்ளரசு மரம் அமைந்துள்ள வீதிக்கு எதிரில் அமைந்துள்ளன. வழிபாட்டு தலத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இப்படியான பூங்காக்கள் இருக்கக் கூடாது என அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ மஹாநாம, மாநகர ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Read More