விஜய் இன் மெர்சல் படத்தை பார்க்க ஆவலாக உள்ள நாமல்

விஜயின் மெர்சல் டீசரை பார்த்து தாம் மகிழ்ச்சி அடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி விஜயின் மெர்சல் திரைப்பட டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அதைப் பார்த்து தாம் மகிழ்ச்சியடைந்ததாக நாமல் ராஜபக்ஷ, தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சில புதிய பாடல்களைக் கேட்கவும் தாம் ஆவலாக உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts