நீரிழிவு நோயாளிகள் குழிப்புண்ணுக்கு வருந்தவேண்டாம்! இருக்கிறது தீர்வு

இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்காக அவர்களின் கால்களை அல்லது கால் விரல்களை வெட்டிவிடுவார்கள். இதனால் குறித்த நோயாளிகளின் பாதிக்காலமே பரிதாபத்துடன் கழிகிறது.

கால்களையோ விரல்களையோ வெட்டிவிடாமல், நமது முன்னோர்களின் நாட்டு வைத்திய முறையில் தகுந்த சிகிச்சை முறையினை மேற்கொள்ளமுடியும்.

அதைச் சொல்வதற்கு முன்னர், ஆங்கில வைத்திய முறைப்படி கால் அகற்றுவதைப்பற்றி சொல்லவேண்டும்.

நீண்ட நாள் ஆறாமல் இருக்கும் குழிப்புண்களுக்காக சிகிச்சையளிப்பார்கள். ஆனால் எந்த மருந்துக்கும் ஆறாமல் அந்தப் புண் மிகப்பெரிய அவஸ்தையை நோயாளிக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இறுதியில் புண் ஆறவில்லை என்பதற்காக அந்த புண் இருக்கின்ற பாகத்தை அகற்றிவிடுவார்கள். இதன் பின்னர் வருகின்ற வேதனையும் அவஸ்தையும் பாதிக்கப்பட்டவனுக்குத்தான் தெரியும்.

ஆனால் இதற்கு தகுந்த மருத்துவ முறையொன்றை எமது முன்னோர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதுதான் ஆவாரம் இலை!

”ஆவாரம் பூவு ஆறேழு நாளா நான்போகும் பாதையில் காத்திருக்க…” என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். ஆமாம், நாம் நடந்து செல்லும் பாதையில் ஆவாரம் பூ மட்டுமல்ல, ஆவாரம் இலையும் நமக்காகத்தான் காத்திருக்கிறது.

இந்த இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து, அதனை ஒரு கரண்டியில் இட்டு, அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு, இலேசான சூட்டில் வதக்கவேண்டும்.

இவ்வாறு வதக்கியதை எடுத்து புண் உள்ள இடத்தில வைத்து துணியால் கட்டிவிடவேண்டும். இவ்வாறு ஒன்றுவிட்ட ஒரு நாள் கட்டிவர குழிப்புண் காணாமல் சென்றுவிடும்.

அநியாயமாக புண்ணுடன் அவஸ்தைப்படும் நோயாளிகளுக்கும் கால்களை இழக்கப்போகும் நோயாளிகளுக்கும் இந்தத் தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

Comments

comments

Related posts