நீரிழிவு நோயாளிகள் குழிப்புண்ணுக்கு வருந்தவேண்டாம்! இருக்கிறது தீர்வு

இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்காக அவர்களின் கால்களை அல்லது கால் விரல்களை வெட்டிவிடுவார்கள். இதனால் குறித்த நோயாளிகளின் பாதிக்காலமே பரிதாபத்துடன் கழிகிறது. கால்களையோ விரல்களையோ வெட்டிவிடாமல், நமது முன்னோர்களின் நாட்டு வைத்திய முறையில் தகுந்த சிகிச்சை முறையினை மேற்கொள்ளமுடியும். அதைச் சொல்வதற்கு முன்னர், ஆங்கில வைத்திய முறைப்படி கால் அகற்றுவதைப்பற்றி சொல்லவேண்டும். நீண்ட நாள் ஆறாமல் இருக்கும் குழிப்புண்களுக்காக சிகிச்சையளிப்பார்கள். ஆனால் எந்த மருந்துக்கும் ஆறாமல் அந்தப் புண் மிகப்பெரிய அவஸ்தையை நோயாளிக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கும். இறுதியில் புண் ஆறவில்லை என்பதற்காக அந்த புண் இருக்கின்ற பாகத்தை அகற்றிவிடுவார்கள். இதன் பின்னர் வருகின்ற வேதனையும் அவஸ்தையும் பாதிக்கப்பட்டவனுக்குத்தான் தெரியும். ஆனால் இதற்கு தகுந்த மருத்துவ முறையொன்றை எமது முன்னோர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதுதான் ஆவாரம் இலை! ”ஆவாரம் பூவு ஆறேழு நாளா நான்போகும் பாதையில் காத்திருக்க…”…

Read More

இலங்கையில் இனி பலசரக்கு கடைகளிலும் பியர்

உயர் ரக மதுபான வகைகளாக கருதப்படும் வைன் மற்றும் பியர் என்பவற்றை விநியோகத்துக்கான அனுமதிப் பத்திரத்தின் சட்ட திட்டங்களை இலகுபடுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நேற்று (22) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் வழங்கும் சகல நாடுகளிலும், எல்லாக் கடைகளிலும் வைன், பியர் போன்ற மதுபான வகைகள் விற்பனை செய்கின்றன. இருப்பினும், இது தொடர்பில் எமது நாட்டில் மாத்திரமே அனுமதிப் பத்திரமொன்றை அறிமுகம் செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

400 வருடங்கள் வாழ வேண்டுமா? – பாபா ராம் தேவ் தரும் ஆலோசனை

மனித உடல் 400 வருடங்கள் வாழும் தன்மை உடையது எனவும், அந்த இலக்கை அடைய முடியாமல் போவதற்கு நாமே காரணம் எனவும் யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடந்த 12வது தேசிய தர கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகா குரு பாபா ராம் தேவ் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது பற்றி பல ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: நமது உடல் 400 ஆண்டுகள் வாழும் தன்மை உடையது. ஆனால், உணவு மற்றும் நமது வாழ்க்கை முறை ஆகியற்றின் மூலம் உடல்களை சித்திரவதை செய்வதால் நோய்கள் ஏற்பட்டு சீக்கிரமாகவே நாம் மரணமடைந்து விடுகிறோம். நமது தவறான உணவு பழக்க வழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பிற நோய்கள் ஏற்பட்டு நமது ஆயுள் குறைகிறது. மீதமுள்ள காலங்களை…

Read More

வவுனியா புகையிரத நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் – பரபரப்பு

வவுனியா புகையிரத நிலையத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காலை 5.45 மணிக்கு கே.கே.எஸ் நோக்கி புறப்பட்ட புகையிரதம் பொல்காவலை பகுதியில் தடம்புரண்டதால் சுமார் இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் பொல்காவலை பகுதியிலிருந்து பயணிகளை இ.போ.ச பேருந்து மூலம் வேறொரு புகையிரத நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட புகையிரம் மாலை 5.45 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்தது. வவுனியா புகையிரத நிர்வாகி இதற்கு மேல் புகையிரதம் கே.கே.எஸ் நோக்கி பயணிக்காது என தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் புகையிரத நிலையத்தினை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் புகையிரத நிர்வாகியிடம் சுமார் 10 நிமிடத்திற்கு மேல் கலந்துரையாடினார். இதன் பின்னர் புகையிரத நிலையத்திற்கு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த…

Read More

கோர விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பரிதாப பலி – படங்கள் இணைப்பு

மன்னார் – யாழ் பிரதான வீதி, மாந்தை சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் யாழ். ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த சன்முகப்பிள்ளை இதுசன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொர்பில் மேலும் தெரியவருவதாவது, திருக்கேதீஸ்வரத்தில் இருந்து 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில், அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி பிரதான வீதியை கடக்க முற்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறியுடன் குறித்த முச்சக்கர வண்டி மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. அதில் ஒரு இளைஞன் உயிரிழந்த நிலையில், திருக்கேதீஸ்வரத்தை சேர்ந்த சதுகரன் (வயது-19), கூறாய் மேற்கைச் சேர்ந்த சதீஸ்குமார் (வயது-20), கைதடியைச் சேர்ந்த எஸ்.தமிழ் வானன் (வயது-18) ஆகிய மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன், படுகாயமடைந்த…

Read More

இலங்கையில் மாறுவேடத்தில் பணிபுரியப் போகும் போக்குவரத்து பொலீஸார்

வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளைக் கண்டறிவதற்காக இன்று முதல் எதிர்வரும் சில வாரங்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்று கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. சிவில் ஆடையில் நடமாடும் காவல்துறையினர், சாதாரண வாகனங்களில் கொழும்பு நகரின் சில பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளை அடையாளம் கண்டு, பின்னர் உத்தியோகபூர்வ ஆடையணிந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. சட்டத்தையும் மதிக்கும் மற்றும் ஒழுக்கம் மிக்க சாரதிகளை உருவாக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என்றும் காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

வடமாகாணத்தில் முடக்கப்பட்டுள்ள ஆவா குழு

மக்களுக்குப் பீதியூட்டும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஆவா குழுவின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று (23) முற்பகல் யாழ். சுண்டுக்குளியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவிக்கையில், மக்களுக்குப் பீதியூட்டும் வகையில் செயற்பட்டுவந்த ஆவா குழுவின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் மது போதையில் வீதிகளில் மக்களுக்கு இடையூறு விளைவிப்போர் மற்றும் போதைவஸ்து பாவனையாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும், தமிழ் பேசும் பொலிஸார் குறைவாக காணப்படுவதனால் பணிகளை தமிழ் மொழில் மேற்கொள்வதில் சிரமங்கள் நிலவுகின்றன. அத்துடன், வீதி ஓரங்களில் அனுமதியின்றி இந்து, பௌத்த, கிறிஸ்த சமயங்களின் தெய்வ சிலைகளை அமைப்பதன் காரணமாக வீண் பிரச்சினைகள் சமூகங்களுக்கு இடையில்…

Read More

விஜய் இன் மெர்சல் படத்தை பார்க்க ஆவலாக உள்ள நாமல்

விஜயின் மெர்சல் டீசரை பார்த்து தாம் மகிழ்ச்சி அடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இளைய தளபதி விஜயின் மெர்சல் திரைப்பட டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அதைப் பார்த்து தாம் மகிழ்ச்சியடைந்ததாக நாமல் ராஜபக்ஷ, தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சில புதிய பாடல்களைக் கேட்கவும் தாம் ஆவலாக உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More

தின பலன் – 23 செப்டம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க் ராசி ரிஷபம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ் ராசி மிதுனம் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள்…

Read More