17 வயது சிறுவனுடன் காதல் – கணவனை உதறிய 27 வயது பெண்

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், 17 வயது சிறுவனுக்காக தனது கணவரை தூக்கி ஏறிந்த விவகாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பகுதியில் வசிக்கும் 27 வயதுள்ள ஒரு பெண்ணிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, சமீபத்தில் அவர் கணவனை விட்டுவிட்டு சிறுவனுடன் மாயமானார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விசாரணையில் இறங்கிய போலீசார், அவர்கள் இருவரும் மதுரையில் தங்கியிருப்பதை கண்டு பிடித்து, ஆரல்வாய் மொழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் கணவர், நடந்ததை மறந்து விட்டு ஒன்றாக வாழ்வோம். என்னுடன் வந்து விடு என கெஞ்சினார். ஆனால், அந்த பெண்ணோ, நான் சிறுவனுடன் தான் செல்வேன் என உறுதியாக கூறினார். மேலும், அந்தப் பெண்ணுடன் தான் வாழ்வேன் என அந்த சிறுவனும் கூறினார்.

ஆனால், திருமணம் செய்ய 21 வயது நிரம்பியிருக்க வேண்டும் என ஆலோசனை கூறி சிறுவனை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். அதேபோல், கணவருடன் செல்ல மறுத்த அப்பெண்ணை குழந்தைகளுடன், அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அப்பெண்ணின் கணவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments

Related posts