ஆங் சாங் சூச்சியின் பேச்சு: உலக தலைவர்கள் விமர்சனம்

மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சாங் சூச்சி, ரக்கைன் மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளையும், ரோஹிஞ்சா அகதிகள் பிரச்சனையையும் கையாளும் விதம் குறித்து, அதிகப்படியான சர்வதேச அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளார். செவ்வாயன்று ஆற்றிய ஓர் உரையில், மியான்மரின் தலைவர், உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனாலும், ராணுவத்தின் மீது எந்த பழியும் கூறவோ, இன சுத்திகரிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தோ பேசவில்லை. அவரின் நிலைப்பாடு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக, பல தலைவர்களும், தூதர்களும் கூறியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நான்கு லட்சம் ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு சென்றுள்ளனர். கடந்த மாதம் ரக்கைன் மாநிலத்தில் உள்ள காவல் சாவடிகள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலே அண்மை காலத்தில் உள்ள அமைதியின்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இதற்கு புதிதாக உருவெடுத்துள்ள ரோஹிஞ்சா குழுவான அர்சா எனப்படும் அரக்கன் ரொகிஞ்சா சால்வேஷன் ஆர்மி தான் காரணம்…

Read More

கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்குத் தெருவில் பற்றி எரிந்த கடைத்தொகுதி

கொழும்பு புறக்கோட்டையின் இரண்டாவது குறுக்கு தெருவிலுள்ள விற்பனை நிலைய கட்டடத்தொகுதி ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீப்பரவல் காரணமாக 16 விற்பனை நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீப் பரவலுக்கான காரணத்தை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read More

தின பலன் – 21 செப்டம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே ராசி ரிஷபம் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு ராசி மிதுனம் கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக…

Read More