முதலுக்கு மோசமான மின்சார சபை ஊழியர்களின் நிலை – 3000 பேர் வீட்டுக்கு துரத்தப்பட்டனர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மூவாயிரம் ஊழியர்களை பணி நீக்குவதற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது.

தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் பண அறவீட்டாளர்கள் ஆகியோர் இன்று பதவி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.

வேலைநிறுத்தம் காரணமாக கடமைக்கு வராத அவர்களை பணியிலிருந்து தாமாக விலகிக் கொண்டவர்களாக தீர்மானித்து செயலாற்ற மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அது தொடர்பான அறிவித்தல் கடிதம் அனைவருக்கும் அனுப்பப்பட்டு வருவதாக மின்சார சபையின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு விலக்கப்படும் ஊழியர்களுக்குப் பதிலாக புதிய ஊழியர்கள் விரைவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் மின்சார சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Comments

comments

Related posts