பருத்தித்துறையில் சிறுமியைக் கைவிட்டுக் காதலன் தப்பியோட்டம்

பொலிஸாரைக் கண்டதும் காதலியைக் கைவிட்டுத் காதலன் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் இன்று காலை பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை முதல் தமது பிள்ளையைக் காணவில்லை என பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. குறித்த 14 வயதுடைய சிறுமி 19 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காதலிப்பதாகவும் குறித்த இருவரும் கற்கோவளம் பகுதியில் தங்கியிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று காலை குறித்த பகுதிக்குப் பொலிஸார் சென்றுள்ளனர். வீடொன்றில் தங்கியிருந்த இளைஞன் பொலிஸாரைக் கண்டதும் சிறுமியைக் கைவிட்டுத் தப்பியோடியுள்ளான். சிறுமியைப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்ற பொலிஸார் இளைஞனைத் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

இலங்கையில் அருவருப்பு – தாயும், மகனும் விபச்சார விடுதியில் கைது

கேகாலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் விபசார விடுதியில் இருந்த தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை பிடியாணையை பெற்ற பின்னர் உளவாளி ஒருவரை பயன்படுத்தி காவல்துறை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. உளவாளி விபசார விடுதியில் நுழைந்த பின் கொடுத்த தகவலுக்கு அமைய காவற்துறையினர் அதிரடியாக உள்நுழைந்து அங்கிருந்த ஆண்கள் மற்றும் பெண்களையும் கைது செய்துள்ளனர். நேற்று காலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மீபிட்டிய பகுதியில் இந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை நடத்திச் சென்ற பெண்ணொருவர், விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் மற்றும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். விபசார விடுதியை நடத்திச் சென்ற பெண், 54 வயதானவர் என்பதுடன், ஏனைய இரு பெண்களும் 50 மற்றும் 43 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கம்பளை, மீபிட்டிய ஆகிய…

Read More

சாவச்சேரியில் சிகரெட் புகைத்தவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை

பொதுமக்களுக்கு இடையூறான வகையில் பொது இடங்களில் புகைபிடித்த ஏழு பேருக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதவானால் 14 ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகச் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் திடீர் பரிசோதனைகள் நடாத்தினர். இதன் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் புகைபிடித்த எழுவருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்குகளை தொடர்பில் இன்று புதன்கிழமை(20) நீதவான் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். இதன் போது குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து ஒவ்வொருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் மொத்தம் 14 ஆயிரம் ரூபாவை நீதவான் அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Read More

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிக்கு பயிற்சி முத்தம் கொடுத்த அதிகாரி

பாடசாலை மாணவி ஒருவர் விளையாட்டு பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ள அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சமூர்த்தி அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – மண்டைத் தீவு பிரதேசத்தினை சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவரே இந்த சம்பவத்தில் அதிகாரியிடம் சிக்கியுள்ளார். சந்தேக நபரான சமூர்த்தி அதிகாரி நேற்றைய தினம் யாழ்ப்பாண காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமிக்கு கடந்த 12 ஆம் திகதி மண்டைத் தீவு – கிராமசேவை பிரிவு அதிகாரிகளினால் விளையாட்டு பயிற்சி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவி அத் தினத்தில் சென்றுள்ளதுடன், விளையாட்டரங்கில் உள்ள அறை ஒன்றில் வைத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்….

Read More

யாழ்ப்பாணத்தின் பிரபல தேசிய பாடசாலை மாணவன் அதிரடியாக கைது

யாழ். சங்குவேலிப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்கினைத் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவனை இன்று காலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த மாணவனிடம் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன்போது கஞ்சா கலந்த மாவா பாக்கு வைத்திருந்தமைக்காக தரம் – 10 இல் கல்வி கற்கும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஞானசார தேரரின் தமிழினப் பற்று – அதிரடி கருத்துக்களை வெளியிட்டார்

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உண்மையான வீரன். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். மஹிந்த அரசு போரின் மூலம் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டபோதும் தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வதற்கு எந்த வேலைத்திட்டமும் அமுலாகவில்லை. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத்தூபி அமைத்திருந்தாலும் பிரச்சினை இல்லை என தேரர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் இந்த கருத்தினை வெளியிட்டார். எந்த அரசியல் கொள்கையில் இருந்தாலும் நாட்டு மக்கள் மஹிந்தவுக்கு நன்றியுடையவராக இருக்க வேண்டும். இலங்கையின் வாழ்நாள் அரசனாக மஹிந்த இருக்க வேண்டியவர். அது நடைபெறவில்லை. அவரைச் சுற்றியிருந்த ஆலோசகர்கள் சரியான ஆலோசனைகளை வழங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. சிங்கள மக்களுக்கு மஹிந்த வீரர் போன்று பிரபாகரன் தமிழ் மக்களுக்கு…

Read More

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இருந்த விலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3 டொலரினால் உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய உலக சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 312 டொலரினால் பதிவாகியுள்ளது.

Read More

இலங்கையில் 40,50,58 வயது விபச்சாரிகளுடன் பிடிபட்ட 18,23,28 வயது இளைஞர்கள்

கேகாலையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைது கேகாலை – மீபிடிய பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது , மூன்று பெண்கள் உட்பட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் , 950 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும் இதன் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் 54 , 40 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் கம்பளை , மீபிடிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் , கைது செய்யப்பட்ட நபர்கள் 23 , 28 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் பிலியந்தலை , கம்பளை மற்றும் மீபிடிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் கேகாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Read More

இலங்கையில் மரக்கறி உண்போருக்கு காத்திருக்கும் பேராபத்து

நாளாந்தம் மக்கள் உணவுக்கு எடுத்து கொள்ளும் உணவுகளில் குறிப்பிடதக்க அளவு ஈயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுகளை மேற்கொண்ட சிறப்பு மருத்துவர் டீ.பீ ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார். அரிசி மற்றும் மரக்கறிகளில் அதிகளவு ஈயம் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈயத்துக்கு மேலதிகமாக வேறு பொருட்களான கெட்மியம் மற்றும் ஆசனிக் போன்ற இரசாயனப் பொருட்கள் குறித்து சோதனைக்குட்படுத்தப்பட்டது. ஈயம் எனப்படும் இரசாயனத்தை அனைத்து வகை உணவுகளிலும் காணக்கூடியதாக இருந்தது. அரிசி ஒரு கிலோகிராமுக்கு 232 மைக்ரோ கிராம் என்ற அளவில் ஈயம் காணப்படுகிறது. மரக்கறியில் 201, குரக்கனில் 262 மற்றும் பழ வகைளில் 133 மற்றும் மீன்களில் 67 என்ற அளவிலும் காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த இரசாயனங்கள் உணவில் இந்தளவில் உள்ளதா என்பதை தம்மால் நம்பிக்கைகொள்ள முடியவில்லை என…

Read More

இலங்கை அரசுக்கு கண்டிப்பான கருத்தொன்றை கூறியுள்ள கூட்டமைப்பு

இலங்கையில் எந்தவொரு தேர்தலை நடத்துவதற்கு முன்னரும் புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பே நடத்தப்படவேண்டும் என்று அரசிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் டிசெம்பரில் நடைபெறலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த விடயத்தை அரசிடம் மீண்டும் ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது கூட்டமைப்பு. மூன்று மாகாண சபைகளுக்கும் இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் அது புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்று நம்பப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தல், அதைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்று அடுத்தடுத்து தேர்தல்கள் வந்தால் புதிய அரசமைப்பு முயற்சி நிச்சயமாகப் பின்தள்ளப்பட்டுவிடும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் வியாழக்கிழமைதான் புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இந்தத் தருணத்தில்…

Read More