12 பெண்களை கற்பழித்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்

இந்தியாவில் சுமார் 12 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மகனை, கூலிப்படையை வைத்து கொன்ற தாய் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்திய செய்திகள் இதனை தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகிலுள்ள பயந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சரண் ராம்தாஸ் (21).

போதைக்கு அடிமையானவர். இவர், அவர் உறவினர்கள் உட்பட 12 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

போதையில் பலரை சித்திரவதையும்; செய்துள்ளார்.

மகனை திருத்த முயன்றும் தாயால் முடியவில்லை.

ஒரு கட்டத்தில் பெற்ற தாயையும், வளர்ப்பு தாயையுமே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவனது தாய், ராம்சரணை கொல்ல முடிவெடுத்தார்.

இதற்காகக் கூலிப்படைக்கு முன்பணமாக இந்தியா ரூபாய் 50 ஆயிரம் கொடுத்தார்.

அவர்கள், ராம்சரணை, வாசி என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக்கொன்றனர்.

இதையடுத்து கொலை செய்ய தூண்டிய தாயையும், கூலிப்படையை சேர்ந்த மூன்று பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

பெற்ற தாயே மகனை கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments

Related posts