பாடசாலை மாணவியை பாலியல் சீரழித்த அதிபரும் ஆசிரியரும்

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை அப்பள்ளின் அதிபர் மற்றும் ஆசிரியர் இருவரும் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை அப்பள்ளியின் முதல்வரும், ஒரு ஆசிரியரும் சேர்ந்து வெகு நாட்களாகவே பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். எனவே, அவரை ஷாக்புராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருகலைப்பு செய்துள்ளனர்.

அதன் பின் வீட்டிற்கு சென்ற அந்த சிறுமியின் உடலை மிகவும் மோசமடைந்தது. அதன் பின்னரே அவரின் பெற்றோருக்கு இந்த தகவல் தெரியவந்தது. எனவே, இதுகுறித்து அந்த பகுதி காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இது தெரிந்ததும் பள்ளியின் முதல்வரும், அந்த ஆசிரியரும் தலைமறைவாகி விட்டனர்.

ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் மற்றும் அந்த ஆசிரியர் மீது போலீசர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments

comments

Related posts