ஆண்கள் மலசல கூடத்துக்குள் புகுந்து செல்பி எடுத்த கஜால்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் மூலமாகப் பலரும் இதுவரை பிரபலமாகியுள்ளனர். இந்தி, தெலுங்கு பிக்பாஸ்களில் கலந்துகொண்டு அதனால் படங்களில் நிறைய வாய்ப்பு கிடைத்தவர்கள் ஏராளம். அந்த வகையில் படங்களிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்துகொண்டார். இதன்மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிச்சயமானார். பிக்பாஸில் எலிமினேஷன் ஆன இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

தியேட்டர் ஒன்றின் ஆண்கள் டாய்லெட்டில் செல்ஃபி எடுத்துள்ளார். ‘நான் ஏன் இன்னிக்கு இங்கே இருக்கேன்?’ கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்…’ என ரசிகர்களை யூகிக்கச் சொல்லிக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Comments

comments

Related posts