வார பலன் – (18 – 25 செப்டம்பர் 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

வித்தியாசமாக யோசித்து வெற்றி பெறுபவர்களே! உங்களுடைய ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டேயிருப்பதால் அஷ்டமத்துச் சனியின் பாதிப்பு ஓரளவு குறையும். மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணம் வரும் என்றாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வீட்டை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். சூரியன் 6-ம் இடத்தில் அமர்ந்ததால் அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். 22-ந் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால் சோர்வு, களைப்பு, கழுத்து வலி வந்துப் போகும். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் ஏமாற்றங்கள், இழப்புகள், மறைமுக எதிர்ப்புகள், பிரச்னைகளெல்லாம் வந்துப் போகும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்நீச்சலில் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 22, 23, 24 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

பேச்சை விட செயலே பெரியதென ஆழமாக நம்புபவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி. ஐ. பிகள் உதவுவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள். கடன் பிரச்னையில் ஒன்றை தீர்க்க வழி வகைப் பிறக்கும். மனைவிவழியில் ஆதரவுக் கிட்டும். சூரியன் 5-ல் நுழைந்ததால் முன்கோபம், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். சகட குருவும், கண்டகச் சனியும் தொடர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், குழப்பம் வந்து நீங்கும். பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். மறைமுக விமர்சனங்களும், எதிர்ப்புகளும் அதிகமாகும். கௌரவக் குறைவான சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழக்கூடும். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். 3-ல் ராகு நிற்பதால் வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 19, 23 அதிஷ்ட எண்கள்: 5, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: கிழக்கு

தன்னை ஆளத் தெரியாதவனால் பிறரை ஆளத் தெரியாது என்பதை அறிந்தவர்களே! குருபகவான் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினரை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சூரியன் சென்றுக் கொண்டிருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். பேச்சில் காரம் வேண்டாமே. மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. கன்னிப்பெண்களே! காதலில் தெளிவுப் பிறக்கும். நல்லவர்களின் நட்பால் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் பரந்த மனசை மூத்த அதிகாரி புரிந்துக் கொண்டு உதவுவார். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். நீண்ட கால கனவுகளெல்லாம் நனவாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 19, 20 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு அதிஷ்ட திசை: வடமேற்கு

கட்டுப்பாடுடன் வாழ்ந்து மற்றவர்களையும் கட்டுப்படுத்துபவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். பேச்சில் அறிவு முதிர்ச்சி வெளிப்படும். தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். 4-ல் குரு தொடர்வதால் தவறானவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். சனி, ராகு, கேதுவும் சாதகமாக இல்லாததால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். வயிற்று உபாதைகள், நெஞ்சு எரிச்சல், வாய் புண், அலர்ஜி வந்துப் போகும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். தடைகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 19, 22 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன் அதிஷ்ட திசை: தென்மேற்கு

வழிபாடுகள் செய்வதுடன் மற்றவர்களை வழி நடத்திச் செல்வதிலும் வல்லவர்களே! கேது 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். மனஇறுக்கம் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய வழி பிறக்கும். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டாலும் பல நேரங்களில் அறிவுப் பூர்வமாக முடிவுகள் எடுப்பீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். ராசிநாதன் சூரியன் 2-ல் அமர்ந்ததால் முன்கோபம், பல், கண் வலி, காது வலி வந்து நீங்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் தடைப்பட்டு முடியும். இடம், பொருள், ஏவலறிந்துப் பேசப்பாருங்கள். சின்ன சின்ன பிரச்னைகள் வரக்கூடும். யோகாதிபதி செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். சொத்து வாங்குவது, விற்பது இழுபறியாகி முடியும். வாகனம் பழுதாகும். அர்த்தாஷ்டமச் சனி நீடிப்பதால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! புது நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி உங்களுடைய திறமையை பரிசோதிப்பார். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும். சகிப்புத் தன்மையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 22, 23, 24 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மெரூண் அதிஷ்ட திசை: கிழக்கு

கறாராகவும், கலகலப்பாகவும் பேசத் தெரிந்தவர்களே! ராகுவும், குருவும் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மூத்த சகோதரர் புரிந்து கொள்வார். ஷேர் லாபம் தரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். பழைய பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். வேற்றுமதத்தவர்களால் அதிரடி மாற்றம் உண்டாகும். ராசிநாதன் புதன் 22-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று அமர்வதால் அழகு, ஆரோக்யம் கூடும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சூரியன் உங்கள் ராசியிலேயே அமர்வதால் வேலைச்சுமை, வீண் டென்ஷன், உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடிவயிற்றில் வலி வந்துப் போகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் வாகனம் பழுதாகி சரியாகும். வீடு கட்டும் பணி முடிவடையும். 12-ம் வீட்டில் செவ்வாய் மறைந்திருப்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் மாறி வரும் சந்தை நிலவரம் அறிந்து புதிதாக முதலீடு செய்வீர்கள். பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 22, 23 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு

இலவசங்களை விரும்பாமலும் மற்றவர்களை சார்ந்திருக்காமலும் வாழ்பவர்களே! செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் நிர்வாகத் திறன் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு வரும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மனைவிவழியில் முக்கியத்துவம் தருவார்கள். சகோதரர் மனம் விட்டு பேசுவர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ராசிநாதன் சுக்ரனும், பாக்யாதிபதி புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் உறவினர், நண்பர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தில் கூடுதலாக செலவு செய்து அதை சீர்திருத்தம் செய்வீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஜென்ம குரு தொடர்வதால் வீண் செலவு, மனஇறுக்கம், கழுத்து, முதுகு வலி, செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம் வந்து நீங்கும். அவ்வப்போது தன்னம்பிக்கை குறையும். குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் வரக்கூடும். உங்களுடைய பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். ராஜதந்திரமாக செயல்பட்டு காய்நகர்த்த வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 19, 24 அதிஷ்ட எண்கள்: 3, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, நீலம் அதிஷ்ட திசை: வடகிழக்கு

மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்களே! செவ்வாயும், சூரியனும் சாதகமாக இருப்பதால் தொட்டது துலங்கும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பாதிபணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் கவுரவப் பதவிகள் தேடி வரும். ஜென்மச் சனி தொடர்வதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். 12-ல் குரு தொடர்வதால் வீண் விரையம், செலவுகள், அலைக்கழிப்புகள் வந்துச் செல்லும். ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு பட்டித்தொட்டியெங்கும் பாராட்டுக் கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 21 அதிஷ்ட எண்கள்: 7, 9 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளம்சிவப்பு அதிஷ்ட திசை: தெற்கு

போராட்ட குணம் அதிகமுள்ளவர்களே! பாக்யாதிபதி சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் கை ஓங்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புது வேலை அமையும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழி உறவுகளால் நன்மை உண்டு. திருமணத் தடை நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். ராசிநாதன் குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் எல்லோராலும் பாராட்டிப் பேசப்படுவீர்கள். ராகு, கேது உங்களுக்கு எதிராக செயல்வடுவதால் பார்வைக் கோளாறு, பேச்சால் பிரச்னைகள், மூச்சுப் பிடிப்பு, அலர்ஜி வந்துப் போகும். கன்னிப் பெண்களே! வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிதாக கொள்முதல் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி புகழ்வார். கலைத்துறையினரே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 21, 22 அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, பிங்க் அதிஷ்ட திசை: கிழக்கு

விடாமுயற்சியால் வெற்றிக் கனியை சுவைப்பவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதிகளான சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். பணத்தட்டுப்பாடு குறையும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். வாகனப் பழுது நீங்கும். நட்பு வட்டம் விரியும். 9-ல் சூரியனும், செவ்வாயும் நிற்பதால் தந்தையின் உடல் நலம் பாதிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அரசு விஷயங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். சொத்து விஷயத்தில் கறாராக இருங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 10-ல் குரு நிற்பதால் தர்மசங்கமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ராகு, கேது மற்றும் செவ்வாயும் சாதகமாக இல்லாததால் வாந்தி, மயக்கம், யூரினரி இன்பெக்ஷன், சிறுசிறு நெருப்புக் காயங்கள், இரத்த அழுத்தம், முன்கோபம் வந்துப் போகும். மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட வேண்டாம். மனைவிக்கு வயிற்று வலி, இரத்த சோகை வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரி கால தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் வெடிக்கும். கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். பொறுமையும், நாவடக்கமும் தேவைப்படும் வாரமிது அதிஷ்ட தேதிகள்: 19, 23, 24 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, பிங்க் அதிஷ்ட திசை: தென்மேற்கு

விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை என்பதை அறிந்தவர்களே! குரு 9-ம் வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிள்ளைகள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிதுர்வழி சொத்து சிக்கல்கள் சுமூகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சூரியனும், செவ்வாயும் சாதகமாக இல்லாததால் உடல் உஷ்ணம் அதிகமாகும். உணர்வசப்படுவீர்கள். சகோதர வகையில் மனக்கசப்புகள் வந்துப் போகும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் இழுபறியாகும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். புதனும், சுக்ரனும் உங்களது ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பணவரவு உண்டு. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். உறவினர், நண்பர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். முக்கியஸ்தர்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களும் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். வெளிச்சத்திற்கு வரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 19, 21 அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்மேற்கு

நல்லதையே செய்து நலிந்தவர்களே! செவ்வாய் 6-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புது வேலைக் கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். தொண்டைப் புகைச்சல், சையனஸ் இருப்பதைப் போன்ற தலை வலி, சளித் தொந்தரவு வந்துப் போகும். 22-ந் தேதி முதல் புதன் உச்சம் பெற்று 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் மனைவியின் உடல் நலம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். பூர்வீக சொத்தை மாற்றி புது வீடு வாங்குவீர்கள். உறவினர்களுடனான மோதல் போக்கு மாறும். 7-ல் சூரியன் நுழைந்திருப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளை வெளியிட போராட வேண்டி வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 21 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், மஞ்சள் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

Comments

comments

Related posts