தின பலன் – 18 செப்டம்பர் 2017

தின பலன்

ராசி மேஷம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ராசி ரிஷபம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் மோதல்கள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி மிதுனம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ராசி கடகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ராசி சிம்மம்
ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் எதிர்பார்த்தவை தாமதமாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி கன்னி
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி துலாம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி விருச்சிகம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ராசி தனுசு
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ராசி மகரம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். பழைய பகை, கடன் நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

ராசி கும்பம்
உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

ராசி மீனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

Comments

comments

Related posts