யாழ்ப்பாணம் அரியாலையில் மின்சாரம் தாக்கி இறந்த அப்பாவி தந்தை

யாழ். அரியாலைப் பகுதியில் வீடொன்றில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தரொருவர் எதிர்பாராத வகையில் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை(16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மின்சார இணைப்பு வேலையைத் தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ள குறித்த குடும்பஸ்தர் அரியாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சார இணைப்பு வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார்.

குறித்த வீட்டில் இன்று காலை முதல் மின்சார இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார்.

அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையாரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

comments

Related posts