44 ஆண்டுகளுக்கு முன் இலங்கை – சில அரிய புகைப்படங்கள்

உலக நாடுகளுக்கு இணையாக இலங்கையும் தற்போது வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. பார்க்கும் இடமெங்கும் வானை முட்டும் உயர்ந்த கட்டடங்களுடன் அழகாக இலங்கை காணப்படுகிறது. இந்நிலையில் 1973ம் ஆண்டில் இலங்கை எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டவர் ஒருவரினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது வெளியாகி உள்ளது. இலங்கை பெருமைப்படுத்தும் வகையில் பல பகுதிகளில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த டன்கன் என்பவரே இந்த புகைபடங்களை எடுத்துள்ளார். அவரின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சிறந்த சுற்றுலாத் தளங்களில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ்ப்பாணம் அரியாலையில் மின்சாரம் தாக்கி இறந்த அப்பாவி தந்தை

யாழ். அரியாலைப் பகுதியில் வீடொன்றில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தரொருவர் எதிர்பாராத வகையில் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை(16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மின்சார இணைப்பு வேலையைத் தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ள குறித்த குடும்பஸ்தர் அரியாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சார இணைப்பு வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார். குறித்த வீட்டில் இன்று காலை முதல் மின்சார இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையாரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

எச்சரிக்கை – இலங்கையில் பரவும் விநோத பாலியல் நோய்

பாலியல் ஊடாக பரவும் பால்வினை நோயான ஹெர்பீஸ் என்ற நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான தேசிய மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. ஹெர்பீஸ் நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக அந்த பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இலங்கையில் பாலியல் ஊடாக பரவும் நோய்களால் பீடிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் ஹெர்பீஸ் என்ற நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவில் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த வருடத்தில் மாத்திரம் பால்வினை நோய்களுக்காக 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சிசிர லியனகே கூறியுள்ளார்.

Read More

தின பலன் – 17 செப்டம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் ராசி ரிஷபம் மற்றவர்களை சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை ராசி மிதுனம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும்….

Read More