ரூ.100 கோடி சொத்தை உதறிவிட்டு துறவறம் போகும் தம்பதி

பல கோடி சொத்துக்களை உதறிவிட்டு கணவன்,மனைவி துறவறம் செல்லும் விவகாரம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பாஜக பிரமுகரின் மகள் அனாமிகா(34). இவர் சுமித் ரத்தோர் (35) என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுமித், தனது தந்தையின் தொழிலை கவனித்து வருகிறார். அதேபோல், அனாமிகா வருடத்திற்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் ஐ.டி. துறையில் பணிபுரிகிறார். இவர்களின் குடும்ப சொத்து ரூ.100 கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த அவர்களுக்கு, சமீப காலமாக துறவறம் மெற்கொள்வதில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, துறவறம் செல்வது என அவர்கள் முடிவெடுத்தனர். பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் அதை தடுக்க முயன்றனர்.

ஆனால், தங்கள் முடிவில் அவர்கள் உறுதியாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. மூன்று வயது அழகிய குழந்தை மற்றும் ரூ.100 கோடி சொத்துக்களை விட்டுவிட்டு அவர்கள் துறவறம் மேற்கொள்ளும் விவகாரம் அந்த பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments

Related posts