கொழும்பில் பாரிய விபத்தை தவிர்த்து தன் உயிரை விட்ட பேருந்து சாரதி

பயணிகள் பேருந்து ஒன்றை ஓட்டி சென்ற சாரதி ஒருவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து ஓட்டி செல்லும் போது அவருக்கு ஏற்பட்ட இயலாமை காரணமாக பேருந்தை ஓரமாக நிறுத்திய பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

புறக்கோட்டை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் சேவை செய்யும் சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் லஹிருகம பிரதேசத்தை சேரந்த 60 வயதான ஜயம்பதி பத்மசோம என்ற இரு பிள்ளைகளின் தந்தையாகும்.

நாளின் முதல் பயணித்தை ஆரம்பித்த போதும் அங்கொடை சந்திக்கு அருகில் சாரதி நோய்வாய்ப்பட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் அதிகளவான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

தனக்கு ஏற்பட்டுள்ள இயலாமையை அறிந்து கொண்ட சாரதி, பேருந்தை ஓரமாக நிறுத்தியமையினால் பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

comments

Related posts