வேலைவாய்ப்பு – முகாமைத்துவ உதவியாளர் – சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சு

இலங்கை சப்ரகமுவ மாகாண அமைச்சின் தகுதிகான், சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 30.09.2017

Read More

தெஹிவளையில் 16 வயது சிறுமியை கற்பழித்து மறைந்த இவனை உங்களுக்கு தெரியுமா? – படம் இணைப்பு

தெஹிவளை பகுதியில் 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 21 வயது இளைஞனைத் தேடி பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு தெஹிவளை பகுதியில் வைத்து குறித்த இளைஞன் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர் யாரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் சிறப்பு விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலை வைத்து ஓவியர் ஒருவரின் உதவியுடன் சந்தேகநபரின் புகைப்படம் வரையப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள பொலிஸ் ஊடகப்பிரிவு, தகவல் தெரிந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறும் மக்களுக்கு அறிவித்துள்ளது. சந்தேகநபரின் பெயர் – நுவன் தரங்க வசிக்கும் இடம் – பானந்துறை உயரம் – 5 அடி 6 அங்குலம்…

Read More

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு நெத்தியடி – கறுப்புப் பட்டியலில் சேர்த்தது பிருத்தானியா

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை பிரித்தானிய மருத்துவச் சபை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. பிரேசில், செனகல், உக்ரைன், லைப்பீரியா, இந்தியா உட்பட 11 நாடுகளில் சில மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் மருத்துவப் பட்டங்களை ஏற்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த கல்லூரிகளை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ள மருத்துவக் கல்லூரிகளில் சைட்டம் 10வது இடத்தில் உள்ளது. இதனடிப்படையில், சைட்டம் உட்பட கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் பட்டங்களை பிரித்தானிய மருத்துவச் சபை அங்கீகரிக்காது. மேலும் இந்த கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள் பிரித்தானிய மருத்துவச் சபையின் பீ.எல், ஏ.பீ. ஆகிய பரிசோதனைகளில் தோற்றவும் அந்நாட்டு மருத்துவச் சபையில் பதிவு செய்துகொள்ளவும் முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

“நிர்வாணமாக்கி… பார்த்துப் பார்த்து ஏளனமாகச் சிரித்த போலீஸார்!” குமுறும் திருநங்கை

நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையால், இன்று தமிழகமே போராட்டக் களமாக மாறியிருக்கிறது. அனிதாவின் மரணவலி அனைவரிடமும் போராட்ட உணர்வாக எரியத் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் மாணவர்கள் தொடங்கி தனிநபர்கள் வரை நீட் தேர்வுக்கான போராட்டத்தைப் பலரும் நடத்தி வருகின்றனர். இப்படிப் போராட்டம் நடத்துபவர்கள்மீது இந்த அரசாங்கம் கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்திச் சிறை சென்ற திருநங்கை கிரேஸ் பானுவை, சிறைக் காவலர்கள் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அவரிடம் பேசினோம். “உலக வணிக அமைப்பில் நம் நாடு கையெழுத்திட்ட காரணத்தால்தான் இந்தியாவில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. இன்று நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற அவலம் இனியும் தொடரக்கூடாது என்ற காரணத்தால்தான் கடந்த 7-ம் தேதி…

Read More

வித்தியா கொலைவழக்கு – பிரபாகரனை வைத்து சுவீஸ்குமாருக்கு பதிலடி கொடுத்த இளஞ்செழியன்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்கின் இறுதி சாட்சி விசாரணையின் போது சந்தேகநபரான சுவிஸ் குமாரிடம் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டது. தான் கண்ணாடியை போட்டு வித்தியாவை பார்த்ததாகவும், தான் குற்றத்தை மேற்கொள்ளவில்லை எனவும், சுவிஸ் குமார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் சம்பவம் நடைபெற்றபோது அவ்விடத்தில் இருக்கவில்லையென எதிர்தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி இளஞ்செழியன், குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் எனவும் அவர் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார். எனினும் தாக்குதல்…

Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுக் கொன்ற பொலீஸார் பிணையில் விடுதலை

யாழ். காங்கேசன்துறை வீதி குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போதே ஐவருக்கும் பிணை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் சார்பில் அவர்களின் உறவினர்களால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் கடந்த 06ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையொன்றினைப் பெற வேண்டியுள்ளதாக அரச தரப்புச் சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார். அவரது…

Read More

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் – மீனம்

ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். மீனம் – (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) வேகமாக செயல்படும் குணம் கொண்ட மீனராசியினரே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல் பட்டால் காரியவெற்றி கிடைக்கும். இந்த குருப் பெயர்ச்சியில் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள்….

Read More

தின பலன் – 14 செப்டம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள் ராசி ரிஷபம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன் ராசி மிதுனம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்….

Read More