மூன்று புதிய ஐ-போன்கள் வெளியிடப்பட்டது – விபரங்கள், படங்கள் உள்ளே

ஆப்பிள் நிறுவனம் அதன் மூன்று புதிய தலைமை ஐபோன் மாடல்களை – ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வெளியான மூன்று ஐபோன்களுடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 3 மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய கேட்ஜெட்களையும் அறிமுகம் செய்துள்ளது.

ஐபோன் எக்ஸ்

வெளியீட்டு நிகழ்வின் சூப்பர் ஸ்டார் சாதனமான இது ஹோம் பொத்தானை கொண்டிருக்கவில்லை. சரி அப்போது சாதனத்தை திறப்பது எப்படி என்று பார்த்தால், இதன் பேஸ்ஐடி (FaceID) உங்களுக்கு உதவும். சாதனத்தில் சேமிக்கப்படும் முகத்தரவுகள் ஆனது ஏ11 பயோனிக் சில் கொண்டு பாதுகாக்கப்படும். இந்த பேஸ்ஐடி அம்சம் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் ஆப்பிள் பே உடன் இணைந்து செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே

ஐபோன் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்பை பொறுத்தமட்டில் துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் கண்ணாடி ஆகியவற்றால் உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த புதிய சாதனம் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் – வெள்ளி மற்றும் கிரே. இது சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் 2436×1125 மற்றும் 458பிபிஐ என்ற திரை தீர்மானம் கொண்ட 5.36 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது. அகச்சிவப்பு கேமரா, ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ட்ரூ டெப்த் கேமரா அமைப்புடன் வரும் ஐபோன் எக்ஸ் ஒரு 64-பிட் செயலி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

கேமரா

எப்/1.8என்ற பரந்தகோண லென்ஸ் மற்றும் இரட்டை தொனியில் ஃப்ளாஷ் கொண்ட முதன்மை 12 மெகாபிக்சல் கேமரா ஒன்றும் மற்றும் எப்/2.4 துளை மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸைப் பயன்படுத்தும் இரண்டாம் நிலை பின்புற கேமராவும் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், இக்கருவி எப்/2.2 லென்ஸ் கொண்ட ஒரு 7 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மூன்று வண்ண மாறுபாடுகளில் வரும் – வெள்ளி, ஸ்பேஸ் சாம்பல் மற்றும் தங்கம். இரண்டுமே மிகவும் நிலைப்புத்தன்மை வழங்கும் கண்ணாடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஐபோன் 8 ஆனது 4.7 இன்ச் டிஸ்ப்ளேவும் மறுகையில் ஐபோன் 8 பிளஸ் ஆனது 5.5 அங்குல டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. புதிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் சக்திவாய்ந்த ஏ11 பியோனிக் சிப் ஆகிய அம்சங்கள் இந்த புதிய மாறுபாடுகளில் இடம்பெற்றுள்ளன. ஏ11 பியோனிக் சிப் கொண்டு இஐங்கும் ஐபோன் 7-ஐ இவிட இந்த சிப் 70 சதவீதம் வேகமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை கேமரா அமைப்பு

ஐபோன் 8 பிளஸ் இரட்டை கேமரா கொண்டு வருகிறது. எப்/1.8 மற்றும் எப்/2.8 துளைகள் கொண்ட இதன் 12எம்பி கேமரா ஆழமான பிக்சல்கள் மற்றும் புதிய கலர் பில்டர்ஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா 240 ப்ரேம் பெர் செகண்ட் என்ற அளவிலான 1080எச்டி ஸ்லோ மோஷன் வீடியோக்களை கைப்பற்றவும் உதவும்.

32 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் இரண்டுமே வயர்லெஸ் சார்ஜ் அம்சம் கொண்டுள்ளது .ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் ஆகியவைகள் முறையே 32 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஓஎஸ்11 ஆனது செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் இந்த இரண்டு சாதனங்களிலும் அப்டேட் ஆகும்.

Comments

comments

Related posts