வார பலன் – (11 – 18 செப்டம்பர் 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

கடினமாக உழைக்கும் குணமும், நல்லதை நினைக்கும் மனசும் கொண்ட நீங்கள், எதிபார்ப்புகளின்றி மற்றவர்களுக்கு உதவுபவர்கள். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் புது திட்டங்கள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ராசிநாதன் செவ்வாய் 5-ம் இடத்தில் நிற்பதால் பிள்ளைகளால் டென்ஷன் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வீண் விரையம், பொருள் இழப்பு, ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை, மறைமுக விமர்சனங்களெல்லாம் வந்துப் போகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை புரிந்துக் கொள்வார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்….

Read More

மூன்று புதிய ஐ-போன்கள் வெளியிடப்பட்டது – விபரங்கள், படங்கள் உள்ளே

ஆப்பிள் நிறுவனம் அதன் மூன்று புதிய தலைமை ஐபோன் மாடல்களை – ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வெளியான மூன்று ஐபோன்களுடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 3 மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய கேட்ஜெட்களையும் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் எக்ஸ் வெளியீட்டு நிகழ்வின் சூப்பர் ஸ்டார் சாதனமான இது ஹோம் பொத்தானை கொண்டிருக்கவில்லை. சரி அப்போது சாதனத்தை திறப்பது எப்படி என்று பார்த்தால், இதன் பேஸ்ஐடி (FaceID) உங்களுக்கு உதவும். சாதனத்தில் சேமிக்கப்படும் முகத்தரவுகள் ஆனது ஏ11 பயோனிக் சில் கொண்டு பாதுகாக்கப்படும். இந்த பேஸ்ஐடி அம்சம் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் ஆப்பிள் பே உடன் இணைந்து செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிஸ்பிளே ஐபோன் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்பை பொறுத்தமட்டில் துருப்பிடிக்காத…

Read More

இலங்கை கோல்பேஸ் கடற்கரையில் உல்லாசம் அனுபவித்த ஆசிரியையும், மாணவனும்

கொழும்பு காலி முகத்திடலில் அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞர் ஒருவரையும், ஆசிரியை ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இளைஞருக்கு 18 வயது மாணவன் என்பதுடன், ஆசிரியை 44 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஆரம்ப பாடசாலையின் ஆசிரியை என்பதுடன் ஒரு குழந்தையின் தாய் எனவும் தெரியவந்துள்ளது. இளைஞர் மற்றும் ஆசிரியையும் காலமுகத்திடலில் அநாகரீகமாக நடந்து கொண்ட போது அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் அதனை பார்த்துள்ளனர். கடந்த 11 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

மக்களுக்கு மகிழ்ச்சி – மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிரான நிர்வாகத்தின் செக்

இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மின்சார சபையின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று மதியம் 12 மணி தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிபுறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே மின்சார சபை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Read More

மனிதாபிமானம் மிக்க தெஹிவளை இளைஞன் ஹூமைட்க்கு ஏற்பட்ட சோக சம்பவம்

என்.எம் ட்ரவல்ஸ் முஹம்மத் ஹாஜியாரின் மகன் ஹூமைட் நேற்றைய தினம் காலமானார். 20 கோடி ரூபா பெட் ஸ்கேனர் மெசினை மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்க இவர் தனது தந்தையின் ஊடாக, திட்டமொன்றை வகுத்து அதில் வெற்றி கண்டவர். கதிஜா பவுண்டேசன் ஊடாக இத் திட்டத்திற்காக முஹம்மத் மிகவும் போராடி வெற்றிகண்டார். அதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவருமான மொஹமட் ஹாஜியாரின் மகன் ஹுமைட் நேற்றைய தினம் வபாத்தாகியுள்ளார். மிக இளம் வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது ஜனாசா நேற்றைய தினம் தெஹிவளை ஜூம்ஆப் பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படும். குறிப்பிட்ட பெட் ஸ்கேனர் இயந்திரத்துக்கான பணம் சேகரிக்கப்பட்டு சுகாதார அமைச்சால் ஜெர்மன் நிறுவனம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் மகரகம வைத்தியசாலையில் அதற்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதால் இதுவரை இங்கு கொண்டு வரப்பட்டு பொறுத்தப்படவில்லை.

Read More

நேற்றிரவு சாவச்சேரியில் மீண்டும் கொடூரமான வாள்வெட்டு

யாழ். சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் புகுந்த அடையாளம் தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவொன்று கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் நுழைய முற்பட்டுள்ளது. குறித்த நபர்கள் வாள்களுடன் வருவதைக் கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் “திருடர்கள்… திருடர்கள்….” என உரத்துச் சத்தமிட்டுள்ளனர். இந்த நிலையில் வீட்டிற்கு வெளியே வந்த இளைஞரை குறித்த குழு சரமாரியாக வாள்களால் தாக்கியுள்ளது. இதனைத் தடுக்க வந்த இளைஞரின் சகோதரி மீதும், சத்தம் கேட்டு ஓடி வந்த அயல் வீட்டு இளைஞர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சம்பவத்தில் பரமேஸ்வரன் சுஜீவன் (வயது 30), அவரது சகோதரியான பரமேஸ்வரன்…

Read More

அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலைவாய்ப்பு – வட மாகாண அரச சேவை, விண்ணப்பப் படிவம் இணைப்பு

இலங்கை வடக்கு மாகாண அரச சேவையின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவத்தை தரவிறக்க இங்கே அழுத்தவும்

Read More

வெளிநாட்டு மோகத்தில் கிளிநொச்சி பெண்கள் இருவர் ஹோட்டல் அறையில் அனுபவித்த கொடுமைகள்

இலங்கையில் இருந்து தரகர்கள் மூலம் கனடா செல்ல முயற்சித்த இரு தமிழ் பெண்களின் திகில் அனுபவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கனடா செல்லும் நோக்கில் பயணத்தை மேற்கொண்ட இவர்கள், மூன்றாம் நாடுகளில் சிக்கியிருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர். இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பில் இரு பெண்களும் விபரித்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த 24 வயதுடைய சலோமி மற்றும் 34 வயதுடைய ஜெனி ஆகிய இருவரும் பெரும் ஆபத்துகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் மீண்டும் இலங்கை வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சலோமி மற்றும் ஜெனி இப்போது இலங்கையில் தங்கள் வீட்டில் இருக்கின்றனர். கனடாவிற்கு மீண்டும் செல்வதற்கான கனவு அவர்களின் வாழ்வில் என்றும் ஏற்படாது என்று ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இவர்கள் தொடர்பில் ஊடகம் வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய, கிளிநொச்சியில் 24 வயதுடைய சலோமி…

Read More

தின பலன் – 13 செப்டம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட் ராசி ரிஷபம் இரவு மணி 7.16 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம் ராசி மிதுனம் வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்….

Read More