பெற்றோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடித் தடை

பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்கள் விற்பனையை சீனா தடை செய்து உள்ளது. எனவே அங்கு மின்சார கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காற்றில் கார்பன் டை ஆக்சைட் அதிக அளவில் கலப்பதால் மாசு ஏற்பட்டு பருவ நிலை மாற்றம் உருவாகியுள்ளது.

இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன.

கார்பனை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளின் படடியலில் சீனாவும் இடம் பெற்றுள்ளது.

அங்கு அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் முதல் கட்டமாக அங்கு பெற்றோல் மற்றும் டீசல் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் தடை செய்யப்பட உள்ளன.

உலக அளவில் அதிக அளவில் பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா உள்ளது.

தற்போது இவற்றை தடை செய்வதன் மூலம் ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மின்சார கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை சீன தொழிற்சாலை துணை அமைச்சர் ஸின் குயோபின் தெரிவித்துள்ளார்.

மேலும் டீசல் மற்றும் பெற்றோல் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து கொடுக்கும்படி கால அட்டவணை பட்டியலை தொழிற்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடந்த ஜூலை மாதமே இத்தகைய வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையை வருகிற 2040-ம் ஆண்டுக்குள் நிறுத்த போவதாக அறிவித்துள்ளன.

Comments

comments

Related posts