01.07.2007 க்கு முன்னர் அரச நியமனம் பெற்றோர் சிங்கள மொழி பரீட்சை எழுத தேவையில்லை

இலங்கையில் அரச சேவையில் உள்ளவர்கள், அவர்களின் தரங்களுக்கு ஏற்ப அரச கரும மொழித் திணைக்களத்தால் நடாத்தப்படும் சிங்கள மொழி பரீட்சையில் தோற்றி சித்தியெய்திருக்க வேண்டும்.

ஆனால் 01.07.2007 க்கு முன்னர் அரச நியமனம் பெற்றோருக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 01.07.2007 க்கு முன்னர் அரச நியமனம் பெற்றோரும், 31.01.2017 இல் 50 வயதை பூர்த்தியடைந்த அரச ஊழியர்களும் இச் சிங்களமொழிப் பரீட்சையில் தோற்றி தேர்ச்சியடைதல் அவசியமில்லை. அதற்கு மாற்றாக, இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடவிதானத்துக்கு அமைய நடாத்தப்படும் 100 மணித்தியால மொழிப்பயிற்சி பாடநெறியில் கலந்துகொள்வது போதுமானதாகும்.

அது தொடர்பாக வெளியிடப்பட்டு சுற்றுநிரூபம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts