இல்லாத ஒரு நபரினால் கற்பழிக்கப்பட்ட இலங்கை பாடசாலை மாணவி

போலியான முறைப்பாட்டை செய்து பொலிஸாரை ஏமாற்றிய பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்துகம பிரதேசத்தின் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தன்னை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், தன்னிடமிருந்த தங்க சங்கிலி மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக குறித்த மாணவியால் போலி முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும் குறித்த மாணவியினால் திருடப்பட்டதாக கூறப்பட்ட தங்க சங்கலி, கையடக்க தொலைபேசி, மற்றும் இசை கருவியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பகுதி நேர வகுப்பிற்கு செல்லும் போது குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டதாக கூறப்பட்டதில் இருந்து மூன்று நாட்களின் பின்னர் அந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் தன்னை கடத்தியவர்கள் யார் என தனக்கு தெரியாதெனவும் ஓரிடத்தில் வைத்து தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய…

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (04 -10 செப்டெம்பர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

01.07.2007 க்கு முன்னர் அரச நியமனம் பெற்றோர் சிங்கள மொழி பரீட்சை எழுத தேவையில்லை

இலங்கையில் அரச சேவையில் உள்ளவர்கள், அவர்களின் தரங்களுக்கு ஏற்ப அரச கரும மொழித் திணைக்களத்தால் நடாத்தப்படும் சிங்கள மொழி பரீட்சையில் தோற்றி சித்தியெய்திருக்க வேண்டும். ஆனால் 01.07.2007 க்கு முன்னர் அரச நியமனம் பெற்றோருக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 01.07.2007 க்கு முன்னர் அரச நியமனம் பெற்றோரும், 31.01.2017 இல் 50 வயதை பூர்த்தியடைந்த அரச ஊழியர்களும் இச் சிங்களமொழிப் பரீட்சையில் தோற்றி தேர்ச்சியடைதல் அவசியமில்லை. அதற்கு மாற்றாக, இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடவிதானத்துக்கு அமைய நடாத்தப்படும் 100 மணித்தியால மொழிப்பயிற்சி பாடநெறியில் கலந்துகொள்வது போதுமானதாகும். அது தொடர்பாக வெளியிடப்பட்டு சுற்றுநிரூபம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Read More

13 வயது சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம்

மூளை ரத்த நாள வீக்கத்தால் இறந்த 13 வயது சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் உடல் உறுப்புகள் அதிகமானோருக்கு தானம் செய்யப்ப்பட்டிருக்கும் வரலாற்று பதிவு இதுதான். சோமர்செட்டில் வாழ்ந்த ஜெமிமா லேஸெல் 2012 ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம், சிறு குடல் மற்றும் கல்லீரல் உறுப்புகள் 5 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன. ஜெமிமா மிகவும் புத்திசாலி, இரக்க குணமுடையவர் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர் என்று தெரிவித்திருக்கும் அவருடைய பெற்றோர், அவர் விட்டு சென்றுள்ளதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார் என்று தெரிவித்திருக்கின்றனர். இதுவரை செய்யப்பட்ட உறுப்புகள் தானத்தில் இவ்வளவு அதிகமானோருக்கு ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் பயன்பட்டதில்லை என்று ஐக்கிய ராஜ்ஜிய தேசிய சுகாதார சேவை தெரிவித்திருக்கிறது.

Read More

வேலைவாய்ப்பு – அபிவிருத்தி உத்தியோகத்தர் – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு

இலங்கை சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகது 24.09.2017. இவ் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவுறுத்தல் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிடப்பட்டு இருப்பதால் அம் மொழியிலேயே இங்கு கீழே இணைத்துள்ளோம். சிரமத்துக்கு வருந்துகின்றோம்.

Read More

மைத்திரியை நோக்கி ஓடிய சிறுமி – தடுத்து நிறுத்திய பொலீஸார் – நெகிழ வைத்த மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வில் மெதிரிய பிரதேசத்தை சேர்ந்த தனுல்யா என்ற சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வருகை தந்திருந்தார். அங்கு ஜனாதிபதியை கண்டவுடன் அவரிடம் இந்த சிறுமி ஓடி செல்ல முயற்சித்துள்ளார். எனினும் பாதுகாப்பு பிரிவினர் சிறுமியை, ஜனாதிபதியின் அருகில் செல்ல சந்தர்ப்பம் வழங்கவில்லை. இந்த சம்பவத்தை அவதானித்த ஜனாதிபதி உடனடியாக அந்த சிறுமிக்கு இடமளிக்குமாறு பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். பின்னர் ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொண்ட சிறுமி நிகழ்வு நிறைவடையும் வரை ஜனாதிபதியுடன் மேடையில் விளையாடியவாறு காணப்பட்டுள்ளார்.

Read More

யாழ்ப்பாணத்தில் அநியாய கட்டணம் வசூலிக்கும் ஓட்டோக்களில் இருந்து இனி விடுதலை

இலங்கையின் ஏனைய பகுதிகளை போலல்லாது யாழ்ப்பாணத்தில் உள்ள ஓட்டோ சாரதிகள் அநியாய கட்டணம் அறவிட்டு வருவதாக பரவலாக முறைப்பாடுகள் உள்ளன. அளவீட்டு மீற்றர் எதுவும் இன்றி வாயில் வந்த விலையை சொல்லி அநியாய கட்டணம் வசூலிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் இவர்கள். இவர்களால் மிகவும் பாதிப்படைவது, அதிகாலையில் பஸ்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பயணிகளே. பேரூந்து சேவை இல்லாத அவ் அதிகாலை நேரங்களில் இவ் ஓட்டோ ஓட்டுனர்களின் அதீதகட்டணங்களால் அவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இச் சிரமங்களுக்கு முடிவுகட்டும் முகமாக வெளிவந்துள்ளது அரசின் அறிவித்தலொன்று. ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்பட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சினால் இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் சரக்குகளை இடம் நகர்த்தும் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்பட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது…

Read More

தின பலன் – 11 செப்டம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் இன்றும் மாலை மணி 4.48 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகள் உங்களை அங்கீகரிப்பார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு ராசி ரிஷபம் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். மாலை மணி 4. 48 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சல் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள் ராசி மிதுனம் எதிலும்…

Read More