மெய் சிலிர்க்க வைக்கும் புத்தளம் பொலீஸ் அதிகாரியின் நேர்மை

புத்தளத்திலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் நேர்மையான செயற்பாடு குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்.

பணத்திற்காக பணியாற்றும் பொலிஸாருக்கு மத்தியில் அனைவருக்கு எடுத்துக்காட்டாக ஒருவர் செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரினால், வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பணப் பையில் பெறுமதியான பணம் மற்றும் ஆவணங்கள் இருந்துள்ளன.

பணப்பையில் 65300 ரூபாய் பணமும், தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் பெறுமதியான ஆவணங்கள் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி செல்லும் போது புத்தளம் நகரத்தில் இந்த பணப்பையை தவறவிட்டுள்ளார்.

குறித்த பணப் பையை கண்டெடுத்த பொலிஸ் காண்ஸ்டபிள், அதன் உரிமையாளரை தொலைபேசி ஊடாக கண்டுபிடித்து, பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் நேர்மையான செயற்பாடு குறித்த பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Comments

comments

Related posts