நீண்ட காலத்தின் பின் தேசிய விளையாட்டு விழாவில் கிளிநொச்சி தமிழ் பெண் சாதனை

43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் தைக் கென்டோ போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி பெண் தங்கப்பதக்கம் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.

இந்த போட்டி, கொழும்பு – ரொறின்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செவ்வாய்கிழமை (05) நடைபெற்றுள்ளது.

போட்டியில் 57-62 கிலோகிராம் நிறைப் பிரிவில் வடமாகாணத்தின் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர்.தமிழ்மகள் தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டுள்ளார்.

இவர் மேல் மாகாணத்தை சேர்ந்த வீராங்கனையுடன் 28.17 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி ஈட்டிக் கொண்டார்.

இதேவேளை, விளையாட்டு திணைக்களத்தினால் தேசிய ரீதியாக திறந்த முறையில் நடந்த படும் மாஷல் ஆட் (வீர விளையாட்டு) போட்டிகளில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர்கள் நீண்ட காலம் தங்கப்பதக்கம் பெறவில்லை.

மேலும், பெண்கள் தரப்பில் தேசிய ரீதியிலான மாஷல் ஆட் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts