திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்குமார்

அஜித் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். எந்த ஒரு இடத்தில் அவருடைய ரசிகர்கள் அஜித்தை கைவிட்டது இல்லை. இந்நிலையில் அஜித் விவேகம் படத்தில் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்துவிட்டார், இதனால், அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மருத்துவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை எடுத்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்களாம், அதை தொடர்ந்து அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர், ஆனால், சிகிச்சை முடிந்து அஜித் நலமாக இருக்கின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Read More

யாழ்ப்பாணத்தின் பிரபல அசைவ உணவக உணவில் இறந்த பல்லி – படம் இணைப்பு

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் செயற்படும் உணவங்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி ஒன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்.கே.கே.எஸ் வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த உணவகத்திற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட உணவில் இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், உணவக உரிமையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் ஏற்றுக் கொள்ள மறுத்த உணவக உரிமையாளர், குறித்த வாடிக்கையாளர் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. எமது உணவகத்தில் உணவு பெற்றுக் கொண்டமைக்கான விலைச்சிட்டை உள்ளதா? என்ன ஆதாரம் உள்ளதென உரிமையாளர் எச்சரித்துள்ளார். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் பல்லியுடன் காணப்பட்ட உணவுப் பொட்டலத்தின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இதேவேளை கடந்த வாரம் யாழிலுள்ள மற்றுமொரு உணவகம் ஒன்றில் மனித…

Read More

காதலன் முன் காதலியை 3 மணித்தியாலம் பலாத்காரம் செய்த 20 பேர்

ஜார்கண்ட் மாநிலம் தும்கா நகர் அருகில் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலன் கண் முன்னே 20 பேரால் 3 மணி நேரம் வரை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கா நகர் அருகே டிஜி என்ற இடத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. அதன் அருகில் பழங்குடியினத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவன் என்பதால், நீ எதற்கு பழங்குடியின பெண்ணை காதலிக்கிறாய் என கூறி தகராறு செய்தனர். அவர்கள் அந்த பெண்ணின் காதலனை அடித்து, உதைத்து அவனிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு அவனை மரத்தில் கட்டிப்போட்டனர். அதன் பின்னர் கத்தி முனையில் மிரட்டி அந்த பெண்ணை 6 பேரும் மாறி மாறி கொடூரமாக…

Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களுக்கு ஓர் கடிதம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சிங்கள மாணவர்களுக்கு அன்பு வணக்கம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற இந்த வேளையில் இக்கடிதத்தை எழுத விழைந்தோம். எங்கள் நாடு ஒற்றுமையாக – சுபீட்சமாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற ஒரே இலக்கிற்காகவே இந்தக் கடிதம் எழுதப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் நீங்கள் நிச்சயமாக தமிழ் மக்களின் கலை – கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை நன்கு அறிந்திருப்பீர்கள். கூடவே உங்களில் பலர் தமிழ் மொழியை பேசவும் கற்றிருப்பீர்கள். இது உங்களுக்கு கிடைத்த ஒரு கொடை எனலாம். பொதுவில் தமிழ் மக்களுக்குத் தென்பகுதித் தொடர்புகள் இருந்தமையால் அவர்களில் ஒரு பகுதியினர் சிங்கள மொழியைப் பேசக் கற்றுக் கொண்டனர். தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றறிந்திருப்பது தொடர்பாடலுக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் பேருதவியாக அமையும்….

Read More

நீண்ட காலத்தின் பின் தேசிய விளையாட்டு விழாவில் கிளிநொச்சி தமிழ் பெண் சாதனை

43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் தைக் கென்டோ போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி பெண் தங்கப்பதக்கம் பெற்று சாதனைப்படைத்துள்ளார். இந்த போட்டி, கொழும்பு – ரொறின்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செவ்வாய்கிழமை (05) நடைபெற்றுள்ளது. போட்டியில் 57-62 கிலோகிராம் நிறைப் பிரிவில் வடமாகாணத்தின் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர்.தமிழ்மகள் தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டுள்ளார். இவர் மேல் மாகாணத்தை சேர்ந்த வீராங்கனையுடன் 28.17 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி ஈட்டிக் கொண்டார். இதேவேளை, விளையாட்டு திணைக்களத்தினால் தேசிய ரீதியாக திறந்த முறையில் நடந்த படும் மாஷல் ஆட் (வீர விளையாட்டு) போட்டிகளில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர்கள் நீண்ட காலம் தங்கப்பதக்கம் பெறவில்லை. மேலும், பெண்கள் தரப்பில் தேசிய ரீதியிலான மாஷல் ஆட் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

சுவிஸ்குமாரை விடுவிக்க செயற்பட்ட அரசியல்வாதி – அறிந்து வைத்துள்ள மைத்திரிபால

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்து வைத்துள்ளார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ்குமாரை விடுவிக்க பிரபல நபர் ஒருவர் செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை விடுவிப்பதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் யார்? மற்றும் சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதி அறிந்துவைத்துள்ளார். இந்நிலையில், சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்டதற்கு துணையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு பிணை வழங்க மறுப்பு…

Read More

வேலைவாய்ப்பு – விசாரணை அதிகாரி, ஏதாவதொரு பட்டத்துடன்

இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் விசாரணை அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட பட்டத்தை கொண்டிருக்கும் பட்டதாரிகள் எவரும் இப் பதவிக்கு விண்னப்பிக்கமுடியும். விண்ணப்ப முடிவுத் திகதி 18.09.2017

Read More

இணையத்தில் வேகமாக பரவும் பிக்பாஸ் ரைசா வின் அரை நிர்வாணப் படங்கள்

கடந்த வருடம் மே மாதம் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட ரைசாவின் கவர்ச்சி போட்டோஷூட் படங்கள் சிலவன வைரலாக பரவி வருகின்றன. இந்த படங்கள் சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் கபில் கணேஷ் என்பவரால் எடுக்கப்பட்டது. இது ஃபேஷன் ஸ்டைலின் மேக்கப் ஆர்ட்ஸ் எனப்படும் MUA வகை போட்டோகிராபி எனப்படுகிறது. இந்த போட்டோஷூட் படங்களில் பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் இதற்கு முன் காண்டிராத அளவிற்கு மிகவும் செக்ஸியான தோற்றத்தில் காணப்படுகிறார். இவ்வகை போட்டோஷூட், ஃபேஷன் ஸ்டைலிங் மேக்கப் ஆர்ட்ஸ் எனப்படும் MUA வகை போட்டோகிராபி எனப்படுகிறது.

Read More

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் – துலாம்

ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். துலாம் – (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த துலாராசியினரே நீங்கள் மனஉறுதிமிக்கவர். இந்த குருப் பெயர்ச்சி பணவரத்தை அதிகப்படுத்தும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறி யாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த…

Read More

இலங்கையில் பாலத்தில் இருந்து குதித்துள்ள 23 வயது இளம் பெண் – ப்ளூ வேல் காரணமா

யுவதியொருவர் களுத்துறை பாலத்தில் இருந்து இன்று காலை 6.45 மணியளவில் களுகங்கைக்கு குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலி இமதுவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு களுகங்கையில் குதித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும் , நிலவும் அதிக மழை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துக்காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அச்சந்தர்ப்பத்தில் அனர்த்த உதவிகளுக்காக அங்கு கடற்படையினரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக செயற்பட்டு குறித்த யுவதியை காப்பாற்றி களுத்துறை -நாகொடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தற்போது ப்ளூவேல் எனும் தற்கொலை விளையாட்டு பிரபலமாகியுள்ள நிலையில் இப் பெண்னின் செயலுக்கும், அவ் விளையாட்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Read More