இலங்கையில் தமது கள்ளக் காதலை உண்மையான காதல் என புரிய வைக்க ஜோடி எடுத்துள்ள முடிவு

மொனராகலையில் கள்ளக்காதல் ஜோடியொன்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை – கொடபோவ – மெதகஹவாடிய பிரதேசத்தில் கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆணொருவரும், பெண்ணொருவரும் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வீட்டின் அறையொன்றில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளவர்கள், 29 வயதான ஆணும், 27 வயதான பெண்ணும் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரின் மனைவி, சில காலங்களுக்கு முன்னர் இவரை விட்டு பிரிந்து சென்றுள்ள நிலையில், அவர் விவகாரத்து வழக்கும் தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணும் ஏற்கனவே திருமணம் முடித்துள்ள நிலையில், அவருக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 6 நாட்களுக்கு முன் இந்த பிரதேசத்திற்கு வந்துள்ளனர். உயிரிழந்த நபரின் சட்டரீதியான மனைவி, தாக்கல் செய்திருந்த…

Read More

தங்கத்தின் விலை திடீரென உயர்வு – இலங்கை விலை விபரம் இணைப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென உயர்வடைந்துள்ளது. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,339 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கடந்த வாரம் 1,330 அமெரிக்க டொலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,339 அமெரிக்க டொலராகியுள்ளது. ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை இன்று திடீரென உலகளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மையே இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வட கொரியாவின் அணு ஆயுத பிரச்சினை உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்திருந்தது. உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்.. தங்கம் அவுன்ஸ் – 203,998 ரூபாய் 24 கரட் 1 கிராம் தங்கம் – 7,200 ரூபாய்…

Read More

ஒரே நேரத்தில் தமிழ் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்தை பாட அரிய யோசனை

நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்காக தேசிய கீதம் ஒரே மேடையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்பட்டு வருகிறது. இலங்கை நமது நாடு என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இது முன்னெடுக்கப்படுகிறது. இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்ட புதிய யோசனை ஒன்று சமூக நல்லிணக்க விரும்பிகளால், முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் தனித்தனியாக பாடுவதற்கு பதிலாக இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பாடுவதன் மூலம் இரண்டாக பிளவுபட்டு மக்கள் மனங்களில் அன்பான உணர்வை ஏற்படுத்த முடியும் என இந்த யோசனை முன்வைத்துள்ள சமூக நல்லிணக்க விரும்பிகள் தெரிவித்துள்ளனர்

Read More

இனி இலங்கை பூராகவும் இலவச இணைய வசதி

இலங்கை பூராகவும் இலவச வை-பை வசதி வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களை மேம்படுத்துதல் மற்றும் உறவுகளை வளர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலவச வை-பை வசதி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதற்கமைய இலவச வை-பை வழங்கும் மண்டலங்களை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொருளாதார டிஜிட்டல் அளவை அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் இணைய வசதி வழங்குவது அவசியம் என்பதனால், சந்தை மற்றும் கட்டுப்பாடுகளுக்கான தடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட வளமான நாடு மாநாட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

உங்கள் பிறந்த திகதி என்ன? உங்களுக்கான நிரந்தர அதிர்ஷ்டங்கள் இது தான்!

ஒருவரின் பிறந்த திகதியை வைத்து அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எண்கள், நிறம், ரத்தினக்கல், திசை, கிழமை மற்றும் வணங்க வேண்டிய கடவுள் ஆகிய அனைத்தை பற்றியும் ஜோதிடம் கூறுகிறது. 1,10,19,28 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள் இந்த எண்களின் அதிபதி சூரியன் அதிர்ஷ்ட எண்கள் – 1, 4 அதிர்ஷ்ட நிறம் – வெளிர் சிவப்பு, சந்தனக்கலர், ஆரஞ்சு, நீலம் கலந்த வெள்ளை அதிர்ஷ்ட ரத்தினக்கல் – கனகபுஷ்பராகம், மாணிக்கம், ப்ளட் ஸ்டோன் அதிர்ஷ்ட திசை – கிழக்கு அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு வணங்க வேண்டிய கடவுள் – சிவன் 2,11,20,29 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள் இந்த எண்களின் அதிபதி சந்திரன். அதிர்ஷ்ட எண்கள் – 2-ன் வரிசை(அதாவது 2,20,29), 7-ன் வரிசை அதிர்ஷ்ட நிறம் – வெண்மை, சந்தனக்கலர் அதிர்ஷ்ட ரத்தினக்கல் – முத்து, சந்திரகாந்த…

Read More

சோடா பாணங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்!

ஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்காக மலை உச்சியில் இருந்து ஹீரோ குதிப்பார், கட்டடங்களைத் தாண்டுவார், வேகமாக வரும் ரயிலை சர்வ சாதாரணமாக கடப்பார். அனைவரையும் ஈர்க்கிறது இப்படி ஒரு விளம்பரம். ஒரு குளிர்பானம்கூட வாங்க முடியாமலா இப்படி ஓடுகிறார் என்று நினைக்கத் தோன்றாமல், தாகம் எடுத்தால், நேராக கார்பனேட்டட் கோலா பானங்கள் பருகத்தான் செல்கின்றோம். குளிர்பானங்கள் குடிக்காதீர்கள் என்றால், ‘நான் ‘டயட்’ கூல் டிரிங்தான் குடிக்கிறேன்’ என்று சமாதானப்படுத்திக்கொள்கிறோம். சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானத்தில் என்ன சேர்க்கப்படுகிறது, இதைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று அறிவோம் . ‘குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். இத்தகைய சோடா, டயட் குளிர்பானங்கள் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய், மாரடைப்பு, எலும்பு அடர்த்தியின்மை என்று ஏராளமான பிரச்னைகள் வரும்…

Read More

அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள்

அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை முன்னெடுக்கப்பட்டமை சிறந்த நோக்கத்துடன், நாட்டின் நலனை கருத்தில் கொண்டே என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற உற்பத்தி தொடர்பான வரி விசேட கட்டளைகள் குறித்த விவாதத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இதேவேளை, நிவாரண அடிப்படையிலான வாகன அனுமதிப்பத்திர முறையினை தாமதித்தாயினும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Read More

சற்றுமுன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் செயலாளருக்கு கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலை தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பை சற்று முன்னர் அறிவித்தது. கடந்த ஜனாதிபதி தேர்தல் நேரத்தின் போது, பிரசாரங்கள் நிமிர்த்தம் தொலைதொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா செலவில் சில் உடை கொள்வனவு செய்த மோசடி தொடர்பில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது. இதன்படி, அவர்கள் இருவருக்கும் தலா மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையுடன், தலா 20 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இருவரும் தலா 50 மில்லியன் ரூபா அடிப்படையில் அரசாங்கத்திற்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

சிங்களத்தில் தண்டப்பத்திரம் எழுதிய வவுனியா பொலீஸ் க்கு எதிராக நடவடிக்கை

போக்குவரத்து விதியினை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பண சிட்டை மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே போக்குவரத்து பொலிஸார் அதனை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜாவால், வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சிங்கள மொழியில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமையை ஆட்சேபித்தும், தனது மொழி உரிமை மீறப்பட்டதாக தெரிவித்து முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு வவுனியா, மன்னார் வீதியைச் சேர்ந்த அன்று பிரசன்னோ என்ற இளைஞரால் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலத்தில் 19.01.2017 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு…

Read More

நாவற்குழியில் படையினரால் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட மாணவி கிருஷாந்தியின் நினைவு நாள் இன்று

யாழ்.நாவற்குழி, செம்மணி பகுதியில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. யாழ்.செம்மணி பகுதியில் கிருஷாந்தி படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, 21 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன், 60க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. இதேவேளை, 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி பாடசாலையிலிருந்து திரும்பிய மாணவி கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவருடைய தாயார் குமாரசாமி இராசம்மாள் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More