இலங்கையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக புதிய நடவடிக்கை

சாரதிகள் குடிபோதையில் உள்ளனரா என பரிசோதிப்பதற்காக 90 ஆயிரம் சுவாச சோதனை குழாய்களை நாடு பூராகவும் உள்ள காவல் நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி , எதிர்வரும் தினங்களில் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , அவர்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு தொடரப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , குடிபோதையில் வாகனம் செலுத்தம் சாரதிகளின் சாரதி அனுமதிபத்திரத்தை சில காலத்திற்கு ரத்துச்செய்ய நீதிமன்றின் அனுமதியை எதிர்ப்பார்த்துள்ளதாக காவற்துறை தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts